திங்கள், மே 13, 2013

முஸ்லிம்கள் சந்திக்கும் சவால்கள் குறித்த பொதுக்கூட்டம் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி பங்கேற்கிறார்!

ல்வித் துறையில் முஸ்லிம்கள் சந்திக்கும் சவால்கள் குறித்த பொதுக்கூட்டம் மும்பையில் வருகிற 29, 30–ந்தேதி ஆகிய 2 நாட்கள் நடக்க உள்ளது. இதில் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி பங்கேற்கிறார்.
‘மவுலானா ஆசாத் விச்சார் மஞ்ச்’ என்ற அமைப்பு சார்பில் கல்வித்துறையில் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர்கள் சந்திக்கும் சவால்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்த 2 நாட்கள் பொதுக்கூட்டம் மும்பை கலினா பகுதியில் உள்ள பல்கலைக்கழக மைதானத்தில் வருகிற 29 மற்றும் 30–ந்தேதி ஆகிய 2 நாட்கள் நடக்கிறது.

இந்த பொதுக்கூட்டத்தை துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி குத்து விளக்கேற்றி தொடங்கி வைக்கிறார். மராட்டிய மாநில முதல்–மந்திரி பிரிதிவிராஜ் சவான், கவர்னர் கே.சங்கரநாராயணன் தலைமை தாங்குகின்றனர். சிறுபான்மையினோர் நலத்துறை மந்திரி ரஹ்மான் கான், துணை முதல்–மந்திரி அஜித் பவார், மாநில மந்திரிகள் நசீம் கான் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

இதுகுறித்து ‘மவுலானா ஆசாத் விச்சார் மஞ்ச்’ அமைப்பின் தலைவர் உசைன் தல்வாய் அளித்த பேட்டியில், கூறியதாவது:– முஸ்லிம்கள் கல்வி பெறுவதற்கு பல்வேறு இன்னல்களுக்குள்ளாகி வருகின்றனர். கல்வியை பெறுவதற்கு அவர்கள் சந்திக்கும் சவால்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து 2 நாள் பொதுக்கூட்டத்தை கலினாவில் நடத்துவதற்கு உள்ளோம்.

மராட்டியம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஏராளமானோரும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்கின்றனர். சிறுபான்மையினோர் நலத்துறை மந்திரி ரஹ்மான் கான், சச்சார் கமிட்டியின் செயலாளர் அபு சலே ஷெரிப் ஆகியோர் கல்வித்துறை சவால்கள் குறித்து பேசுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக