லண்டன்: இஸ்ரேல் பிரதமர் ஷிமோன் ஃபெரஸ் வருகிற ஜூன் மாதம் நடத்தவிருக்கும் பெரியதொரு மாநாட்டை புறக்கணிப்பதாக உலகப்புகழ் பெற்ற விஞ்ஞானியான ஹாக்கிங் அறிவித்துள்ளார்.
ஃபலஸ்தீன பல்கலைக்கழகங்களுக்கான பிரிட்டிஷ் கமிட்டி பேராசிரியர் ஹாக்கிங்கின் ஒப்புதலுடன் வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்றில், இஸ்ரேலை கல்வியாளர்கள் புறக்கணிப்பதை மதிப்பது என்று ஹாக்கிங் எடுத்த முடிவு சுயாதீனமானது என்று கூறியிருக்கிறது.
இந்த முடிவை அவர் ஃபலஸ்தீனம் பற்றி அவருக்கிருக்கும் தகவல்கள் மற்றும் அங்கு அவர் தொடர்பில் இருக்கும் கல்வியாளர்களின் ஆலோசனைகள் ஆகியவைகளை அடிப்படையாகக் கொண்டு எடுத்திருக்கிறார் என்று அந்த அறிக்கை கூறியது. ஆனால் அவரது இந்த முடிவு உடல் நலக்காரணங்களால் எடுக்கப்பட்டது என்று கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கான செய்தி தொடர்பாளர் கூறுகிறார்.
1
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக