செவ்வாய், மே 21, 2013

"போலி என்கவுண்டரில் போலீஸ் என்னை கொலைச் செய்ய முயன்றது – லியாகத் அலி ஷா !

  • போலி என்கவுண்டர் மூலம் டெல்லி போலீஸ் தன்னை கொலைச் செய்ய முயன்றதாக முன்னாள் ஹிஸ்புல் முஜாஹிதீன் உறுப்பினரான லியாகத் அலி ஷா கூறியுள்ளார்.

    டெல்லியில் குண்டுவெடிப்பை நிகழ்த்த வந்தார் என்று குற்றம் சாட்டி டெல்லி ஸ்பெஷல் போலீஸ் பிரிவு கைதுச் செய்த லியாகத் அலிஷாவுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.இந்நிலையில் கஷ்மீருக்கு வந்த லியாகத் அளித்த பேட்டியில் கூறியிருப்பது: மார்ச் 20-ஆம் தேதி என்னை கஸ்டடியில் எடுத்த பிறகு இரவு 11.30 மணி அளவில் தனி போலீஸ் வாகனத்தில் உள்ளே தள்ளி ஆள் அரவம் இல்லாத பாலை வன பகுதிக்கு கொண்டு சென்றனர்.இன்ஸ்பெக்டர்களான சஞ்சய் தத், ராகுல், தர்மீந்தர் ஆகியோர் போலீஸ் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

    பயண நேரம் முழுவதும் என்னை தாக்கிய போலீஸ், வாகனத்தை நிறுத்தி துப்பாக்கிகளில் குண்டுகளை நிரப்பினர்.தொடர்ந்து வாகனத்தில் இருந்து கீழே இறக்கி துப்பாக்கியால் என்னை கொல்ல முயற்சித்தபோது அவ்வழியே ஒரு ஊடக வேன் கடந்து சென்றது.இதனால் போலீஸ் தனது திட்டத்தை கைவிட்டது என்று கூறிய லியாகத், டெல்லி போலீஸின் கைது நாடகத்தை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த தேசிய புலனாய்வு ஏஜன்சிக்கு(என்.ஐ.ஏ) நன்றி தெரிவித்தார்.மார்ச் 20-ஆம் தேதி கைதானபொழுது நான் ஒரு நிரபராதி.ஏ.கே.56 உள்ளிட்ட ஆயுதங்கள் போலீசுக்கு எங்கேயிருந்து கிடைத்தது என்பது தெரியாது என்று லியாகத் தெரிவித்தார்.

    பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள கஷ்மீரில் இருந்து சரணடையவந்தபொழுது கோரக்பூர் எல்லையில் உள்ள அதிகாரிகள் நல்ல முறையில் நடந்துகொண்டனர்.ஜம்மு-கஷ்மீர் போலீசிடம் ஒப்படைப்பதாக கூறி டெல்லி போலீஸ் என்னை அழைத்துச் சென்றது’ என்று லியாகத் கூறினார்.

    அதேவேளையில் லியாகத் கூறியவற்றை டெல்லி போலீஸ் கமிஷனர் நீரஜ்குமார் மறுத்துள்ளார்.3

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக