செவ்வாய், மே 14, 2013

அறிவில்லாமல் வெளியுறவு கொள்கை குறித்து பேசுவதா?: மோடி மீது குர்ஷித் காட்டம்!

சூரத்: "தமக்கு சம்பந்தப்படாத விசயங்களில் போதிய அறிவில்லாமல் மோடி பேசக்கூடாது" இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் மோடியைக் காட்டமாக விமர்சித்து பேசியுள்ளார். குஜராத் மாநில 53-வது ஆண்டு தினத்தையொட்டி அமெரிக்காவில் உள்ள குஜராத் மக்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்வர் மோடி பேசும்போது, "சீனா விவகாரத்தில் காங்கிரஸ் அரசின் வெளியுறவுக் கொள்கை, 120 கோடி இந்திய மக்களின் நம்பிக்கையை தகர்த்துவிட்டது" என்று விமர்சனம் செய்திருந்தார்.


இந்நிலையில் குஜராத் மாநிலம் சூரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் பேசும்போதே மேற்கண்டவாறு மோடிக்கு எதிராக காட்டமான கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

கூட்டத்தில் குர்சித் மோடி குறித்து அவர் பேசும்போது,

"மோடி வெற்றி பெற்றதாக கருதும் விசயங்களில் மட்டும் அவர் பேசுவது உத்தமம். ஆனால், அவருக்குச் சம்பந்தப்படாத விசயங்களில் அவருக்கு போதிய அறிவு கிடையாது. எனவே அப்படிப்பட்ட துறை குறித்த விசயங்களில் அவர் பேசக்கூடாது. மற்றவர்களை அவர் வேலை செய்ய விடவேண்டும்.

அமெரிக்கா செல்வது தொடர்பாக, யாரும் அவருக்காக கதவுகளைத் திறந்து வைத்துக் கொண்டிருக்கவில்லை. ஆனால் அதற்கு பின்னால் உள்ள காரணங்களை அவர் சிந்திக்க வேண்டும்.

ஒருவர் ஒரு விசயம் குறித்து முதலில் சிந்தித்த பிறகு அதுகுறித்து பதிலளிக்க வேண்டும். இதுவே வெளியுறவு கொள்கையின் ஒரு பகுதியாக இருக்கிறது. உள்ளே நுழைய ஒருவர் அனுமதி மறுக்கப்பட்டு இருந்து இருக்கிறார். இதுபற்றி அவர் முதலில் உணரவேண்டும்."
என்று குர்ஷித் பேசினார்.

குஜராத் இன அழிப்பு தொடர்பாக மோடிக்கு அமெரிக்கா விசா மறுத்த விவகாரத்தையே குர்ஷித் நக்கலாக குறிப்பிட்டுள்ளார். இது பாஜக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக