வியாழன், மே 09, 2013

ஹிந்துத்துவா தோற்கடிக்கப்பட்டது! : நடிகை ரம்யா!

பெங்களூரு: "ஹிந்துத்துவா தோற்கடிக்கப்பட்டது ; மக்கள் மதச்சார்பின்மையைத் தேர்வு செய்துவிட்டனர்" என பிரபல கன்னட நடிகையும் கர்நாடகா யூத் காங்கிரஸ் உறுப்பினருமான நடிகை ரம்யா கூறியுள்ளார். கர்நாடக மாநில தேர்தல் முடிவுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதுவரை வெளியாகியுள்ள கணக்கின்படி காங்கிரஸ் 57 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. மேலும் 64 தொகுதிகளில் முன்னணியில் உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் காங்கிரஸ் 121 தொகுதிகளைக் கைப்பற்றி அறுதிபெரும்பான்மையுடன் கர்நாடகாவில் ஆட்சி அமைக்கும்.


காங்கிரஸுக்கு அடுத்தப்படியாக பாஜக 16 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. மேலும் 23 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. மதச்சார்பற்ற ஜனதாதளம் 13 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. 25 தொகுதிகளில் முன்னணியில் உள்ளது.

கர்நாடகாவில் காங்கிரஸுக்குக் கிடைத்துள்ள இந்தப் பெரிய வெற்றிக்கு பாஜகவில் ஏற்பட்ட பிளவே காரணம் என பாஜக தலைவர்கள் கூறியுள்ள நிலையில், மோடியின் மேஜிக் என எதுவுமில்லை; அது வெறும் லாஜிக் என காங்கிரஸ் தலைவர் சீதா ராமைய்யா கூறியுள்ளார்.

பெங்களூரு சேலஞ்சர்ஸ் கிரிக்கெட் அணியின் ப்ராண்ட் அம்பாஸடரும் பிரபல நடிகையுமான ரம்யா காங்கிரஸுக்குக் கிடைத்துள்ள வெற்றி குறித்து, "மக்கள் மதச்சார்பின்மையைத் தேர்வு செய்துள்ளனர். ஹிந்துத்துவா தோற்கடிக்கப்பட்டது" என கருத்து கூறியுள்ளார்.

காங்கிரஸின் வெற்றி கூட்டு முயற்சிக்குக் கிடைத்த வெற்றி என காங்கிரஸ் தலைவர் சோனியா தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக