வியாழன், மே 30, 2013

ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரிக்குமா?

மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ஈரானின் எண்ணெய் வளத்துறை அமைச்சர் ரொஸ்தம் கசேமி (Rostam Qasemi), ஈரானில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதியான கச்சா எண்ணெய் அளவை மீண்டும் அதிகரிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

ஈரான் மேற்கொண்ட அணுஆயுத சோதனையை நிறுத்தும் பொருட்டு, ஈரானிலிருந்து, இந்தியா போன்ற நாடுகள் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கொடுத்த நெருக்கடி காரணமாக, இந்தியா, ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதைக் குறைத்துக் கொண்டது.
இதற்கிடையில், ஈரானில் இருந்து, கச்சா எண்ணெய் கொண்டுவரும் கப்பலுக்கான காப்பீடும் கேள்விக்குறியானது. இதனால் 2011-12 ஆம் ஆண்டில், நாள் ஒன்றிற்கு ஈரானிலிருந்து 3,62,500 பீப்பாய் கச்சா எண்ணெய் இறக்குமதியான நிலையில், 2012-13-ஆம் ஆண்டில் 2,67,000 பீப்பாயாகக் குறைந்தது.
தற்போது இந்தியா வந்துள்ள ஈரானின் எண்ணெய் வளத்துறை அமைச்சர் ரொஸ்தம் கசேமி (Rostam Qasemi), ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை முந்தைய நிலைக்கு மேம்படுத்தும் பொருட்டு, இந்திய அமைச்சர்கள் வீரப்ப மொய்லி மற்றும் சல்மான் குர்ஷித் போன்றவர்களை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.
அப்போது, ஈரானில் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதற்கு தேவையான காப்பீட்டு வசதியை மீண்டும் பெற்றுத் தருவதாக ரொஸ்தம் கசேமி (Rostam Qasemi) வாக்குறுதி அளித்ததாகவும் தெரிகிறது.
இந்தியாவின் கச்சா எண்ணை தேவையை ஈரானிடம் அதிகபடுத்தினால் மட்டுமே பூர்த்தி ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக