வியாழன், மே 09, 2013

எகிப்தில் அமைச்சரவை மறு சீரமைப்பு:இஃவான்களுக்கு முக்கியத்துவம்!

கெய்ரோ: சர்வதேச நாணய நிதியத்துடன்(ஐ.எம்.எஃப்) கடன் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியிருந்த 2 அமைச்சர்களை நீக்கியும், இஃவானுல் முஸ்லிமீன் உறுப்பினர்களுக்கு முக்கியத்துவம் அளித்தும் எகிப்தின் அமைச்சரவை சீரமைக்கப்பட்டுள்ளது.

ஒன்பது அமைச்சர்களை நீக்கியிருப்பதாக பிரதமர் ஹிஸாம் கந்தீல் கூறினார்.இஃவான்களின் அரசியல் கட்சியான ஃப்ரீடம் அண்ட் ஜஸ்டிஸ் கட்சியைச்சார்ந்த மூத்த தலைவர் அம்ர் தர்ராக் திட்ட அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
எகிப்தின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க 480 கோடி டாலர் உதவிக் கோரி எம்.எம்.எஃபுடன் இனி தர்ராக் பேச்சுவார்த்தை நடத்துவார். இஸ்லாமியபொருளாதார கொள்கையில் பாண்டித்துவம் பெற்ற ஃபய்யாத் அப்துல் முனீம் புதிய நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். உள்துறை, பாதுகாப்பு, வெளியுறவுத்துறை அமைச்சர்கள் நீக்கப்படவில்லை. இவ்வாண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலை மேற்பார்வைச் செய்யும் புதிய அமைச்சரவையில் அனைத்து கட்சிகளையும் உட்படுத்தவேண்டும் என்று எதிர்கட்சியினர் கோரியிருந்தனர்.
1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக