செவ்வாய், மே 28, 2013

மௌலான காலித் முஜாஹிதீன் அடித்து படுகொலை! : SDPI கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்!

உத்தர பிரதேசத்தில் 2007ம் ஆண்டு நடைபெற்ற குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட காலித் முஜாஹித் விசாரணைக்காக நீதி மன்றம் அழைத்து வரும் வழியில் போலிசாரால் அடித்தே கொலை செய்யப்பட்டுளார்.

இவருடைய கைது தொடர்பாக நியமிக்கப்பட்டிருந்த நிமேஷ் கமிசன் தனது அறிக்கையில் காலித் முஜாஹித் மற்றும் அவருடன் கைது செய்யப்பட்டிருந்த தாரிக் காசிமி ஆகியோர் அப்பாவிகள்,  அவர்கள் போலியாக கைது செயப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எதிரான வழக்குகள் ஜோடிக்கப்பட்ட ஒன்றாகும். இவர்களை கைது செய்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.  மேலும் இவ்விருவரும் விரைந்து விடுதலை செய்யப்படவேண்டும் என்று தெரிவித்திருந்தது.
காவல் துறையினரோ காலித் முஜாஹிதை என்கவுண்டரில் கொன்றுவிடுவோம் என்று பலமுறை மிரட்டியும் உள்ளனர்.  இது நீதிமன்றத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் தவறு செய்த அதிகாரிகள் தண்டிக்கப்பட இருந்தனர்.  இச்சூழ்நிலையில் அப்பாவியான காலித் முஜாஹித் போலிசாரால் அடித்ஹ்டே கொலை செய்யப்பட்டுள்ளார்.  இம்மரணம் தொடர்பாக காவல்துறையினரை கைது செய்து  சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இராமநாதபுரம் கேணிக்கரையில் இன்று மாலை 4 மணியளவில் நடைபெற்றது.
இராமநாதபுரம் எஸ்.டி.பி.ஐ நகர் தலைவர் நியாஸ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் நூர் ஜியாவுதீன்,  மாவட்ட துணை தலைவர் சோமு, பைரோஸ் கான், மாவட்ட பொது செயலாளர் செய்யது ஹாலிது, மாவட்ட செயலாளர்கள் செய்யது இபுராஹீம், ராம கிருஷ்ணன், இராமநாதபுரம் தொகுதி தலைவர் அப்பாஸ் அலி ஆலிம், செயலாளர் சேகு இபுராஹீம், திருவாடனை தொகுதி தலைவர் சஹீர்தீன், முதுகுளத்தூர் தலைவர் இஷாக். பரமக்குடி தொகுதி தலைவர் கனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் அப்துல் ஜமீல் கண்டன உரை ஆற்றினார். இறுதியாக இராமநாதபுரம் நகர் துணை தலைவர் அப்பாஸ் நன்றி கூறினார். எஸ்.டி.பி.ஐ செயல்வீரர்கள் உட்பட 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக