வியாழன், மே 09, 2013

இந்தியாவில் முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலம்!

இந்த தலைப்பு இந்த நேரத்தில் மிகவும் முக்கியமானதாக கருதுகிறோம், ஏனென்றால்  நேற்று அறிவிக்கப்பட்ட கர்நாடக தேர்தல் முடிவை பார்க்கும்பொழுது முஸ்லிம்களின் வாக்கு சக்திவாய்ந்ததாக மாறியிருக்கிறது. இவ்வளவு காலமாக முஸ்லிம்களுக்கு என்று ஒரு கட்சி இல்லாத காரணத்தால் முஸ்லிம்கள் வெறும் வாக்கு வங்கியாகவே கருதப்பட்டு வந்தார்கள்.


ஆனால் தற்பொழுது முஸ்லிம்களின் எழுச்சியின் காரணமாக முஸ்லிம்களும் அரசியலில் கால் பதிக்க ஆரம்பித்துவிட்டதன் விளைவாக இந்தியா முழுவதும் முஸ்லிம்களின் அரசியல் கட்சிகள் பிரகாசமாக ஒலி வீச தொடங்கியுள்ளன.

அதில் குறிப்பாக "பசியிலிருந்து விடுதலை" பயத்திலிருந்து விடுதலை" என்ற முழக்கத்தோடு இந்தியா முழுவதும் முஸ்லிம்களுக்கு மட்டுமல்லாது தலித், கிருஸ்துவ, பழங்குடியினர்  ஆகிய அனைவருக்காகவும் வீரியத்தோடு களம் இறங்கி செயல்பட்டுகொண்டிருக்கும் அரசியல் சக்தியாக  சோசியல் டெமோக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா (எஸ்.டி.பி.ஐ.) விளங்குகிறது.

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் முதன்முதலாக போட்டியிடும் அக்கட்சி தனது பலத்தை நிரூபித்துள்ளது. 24 தொகுதிகளில் போட்டியிட்டு மொத்தம் 1,00,541 வாக்குகளை அக்கட்சி பெற்றுள்ளது. எஸ்.டி.பி.ஐக்கு ஒரு தொகுதியில் 2-வது இடமும், ஐந்து இடங்களில் 3-வது இடமும், ஒன்பது தொகுதிகளில் நான்காவதும் இடமும் மூன்று இடங்களில் 5-வது இடமும் கிடைத்துள்ளது. அக்கட்சி போட்டியிட்ட பெரும்பாலான தொகுதிகளில் மதசார்பற்ற ஜனதாதளம்,  பா.ஜ.க போன்ற முன்னணி கட்சிகளை பின்னுக்கு தள்ளியுள்ளது, இதன் மூலம் தவிர்கமுடியாத அரசியல் சக்தியாக எஸ்.டி.பி.ஐ. உருவெடுத்துள்ளது,  ஏங்கி கிடந்த மக்களுக்கு நன்பிக்கை நட்சத்திரமாய் எஸ்.டி.பி.ஐ காட்சியளிக்கிறது. மக்களுடைய எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

அதேபோல் தமிழ்நாட்டில் மனித நேய மக்கள் கட்சி இரண்டு MLA வை கொண்டுள்ளது. இதனுடைய வளர்ச்சியும் குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது, மேலும் இன்னொரு தேசிய கட்சியாக தொடங்கப்பட்டுள்ள வெல்ஃபெர் பார்டி இன்னும் பெரிய அளவில் சோபிக்காவிட்டாலும் வருங்காலத்தில் அரசியல் சக்தியாக உருவெடுக்கும் என்று நம்பப்படுகிறது.

எனவே வரும்காலத்தில் இந்தியாவில் முஸ்லிம்கள் பசியிலிருந்து, பயத்திலிருந்து, கலவரத்திலிருந்து, பொருட்கள் சூரையாடபடுவதிலிருந்து, போலி என்கவுண்டரிலிருந்து, அநியாயமாக கைது செய்யபடுவதிலிருந்து, விடுதலை அடைவதற்கு அணைத்து கட்சிகளும் உறுதுணையாக இருக்கும்.

வரும்கால இந்தியா முஸ்லிம்களுக்கு மட்டும் அல்லாது ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட அணைத்து சமுதயா மக்களுக்கும் சிறந்த பொற்காலமாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

வாழ்த்துக்களுடன்,
ஆசிரியர் குழு - ஆசிய நண்பன் மலேசியா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக