பாகிஸ்தான் சிறைச்சாலையில் சக கைதிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்த சரப்ஜித் சிங்கின் உடல் லாகூரிலிருந்து விமானம் மூலம் அவரது சொந்த ஊரான பஞ்சாப்பின் அமிர்தசரஸூக்கு கொண்டு வரப்பட்டது. உடலை பெற்றுக் கொள்வதற்காக சரப்ஜித் சிங்கின் குடும்பத்தினர் அங்கு தயார் நிலையில் காத்திருந்தனர்.
பொதுமக்களின் அஞ்சலிக்குப் பின்னர் சரப்ஜித் சிங்கின் இறுதிச் சடங்கு இன்று நடைபெற உள்ளது. அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சரப்ஜித் குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் நிவாரண நிதியாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் சரப்ஜித் சிங் குடும்பத்திற்கு ஒருகோடி ரூபாய் நிதியும் அவரது இரண்டு மகள்களுக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என பஞ்சாப் முதலவர் பிரகாஷ்சிங் பாதல் தெரிவித்துள்ளார்.
இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் மத்திய அரசின் சார்பில் வெளியுறவுத்துறை இணையமைச்சர் பிரினீத் கவுர் கலந்துகொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக