துவைக்காமல், இஸ்திரி போடத் தேவையில்லாமல், தொடர்ந்து 100 நாட்கள் உபயோகப்படுத்தக்கூடிய விதத்தில் ஒரு சட்டையை அமெரிக்காவின் உல் & பிரின்ஸ் என்ற நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
உல்லன் நூல் கலந்த துணிகள் கசங்காது, வியர்வை வாடையை வெளியிடாத தன்மை கொண்டது. காட்டனைவிட ஆறு மடங்கு உழைக்கக்கூடியது என்பதால் இந்த வகைத் துணியில் நவீன காலத்திற்கு ஏற்ப ஆழ்நீலகலரில் சிறிய கட்டங்கள் கொண்ட சட்டையை வெளியிட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது
இதனை அணிந்து பார்க்க, நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் தாங்கள் எப்படி உபயோகித்தாலும் சட்டைகள் புதிது போலவே இருக்கின்றன என்று கூறுகின்றார்கள். நிறுவன அதிபர் மாக் பிஷப் ஒரே சட்டையை 100 நாட்கள் அணிந்துகொண்டு தெருவில் அனைவரிடமும் அது குறித்த கருத்தினைக் கேட்பது போலவும் அவர்கள் அனைவரும் ஆதரவான கருத்தினை வெளியிடுவதுவும் போன்ற வீடியோ விளம்பரங்களை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.
எல்லோரும் விரும்பும் விதத்திலும், எப்போதும் அணியக் கூடிய வடிவத்திலும்,சாதாரண விலைமதிப்பிலும் இந்த சட்டைகளை உருவாக்கியுள்ளதாக அந்த நிறுவனம் தங்களது இணையதளத்தில் தகவல் வெளியிட்டுள்ளது.
1
payan ulla thagavaluku nandri
பதிலளிநீக்கு