வெள்ளி, மே 03, 2013

இஷரத் ஜஹான் போலி என்கவுன்டர்! - உயர் அதிகாரியை கைது செய்ய உத்தரவு!

குஜராத் மாநில சிறப்பு சிபிஐ நீதிமன்றம், குஜராத் மாநில காவல் துறை ஐஜி பிபி பான்டேயை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டுள்ளது. 2004 ஆம் ஆண்டில் மும்பையில் கொல்லப்பட்ட இஷரத் ஜஹான் போலி என்கவுன்டர் வழக்கில், பான்டேக்கு தொடர்பிருக்கலாம் என்ற சிபிஐயின் வாதத்தை ஏற்று கொண்ட நீதிபதி கீதா கோபி, பான்டேயை கைது செய்யவும், அஹமதாபா மாஜிஸ்ட்ரேட் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்தும் தீர்ப்பளித்தார்.


ஜூன் 14, 2004 ஆண்டு மும்பையில் கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட்ட 4 பேர் அஹமதாபாத் குற்றவியல் காவல் துறையினரால் கொல்லப்பட்டனர். அப்போது இது குறித்து பேசிய குஜராத் காவல் துறையினர், முதல்வர் மோடியை கொல்வதற்கு இவர்கள் 4 பேரும் திட்டமிட்டனர் என்று கூறி வழக்கை திசை திருப்ப முயற்சித்தனர். எனினும் இஷரத் ஜஹான் குடும்பத்தினர், கொல்லப்பட்ட சம்பவம் ஒரு நாடகம் என்றும், இதில் குஜராத் மாநில காவல் துறை உயரதிகாரிகள் பலர் வழக்கை முடித்து வைக்க முயற்சிக்கின்றனர்  என கூறி சிபிஐ விசாரணைக்கு கோரியிருந்தார்.

சிபிஐ வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்டபின், சுமார் 10 க்கும் மேற்பட்ட காவல் துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும் குற்றம் நடந்த போது அஹ்மதாபாத் நகர ஆணையராக இருந்த பான்டே மீது, எந்த வித நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. இதற்கிடையே பான்டேக்கு பதவி உயர்வு அளித்து மோடி அரசு அழகு பார்த்தது.

மனு மீதான விசாரணையின் போது சிபிஐ  வழக்கறிஞர் திவாரி,  என்கவுன்டர் வழக்கு தொடர்பாக, பான்டேயின் வீட்டிற்கு சிபிஐ பல முறை சென்றதாகவும், எனினும் அவரை நெருங்க முடியவில்லை என்றும், எனவே அவரை கைது செய்ய உத்தரவிட வேண்டுமென கூறினார். இதை ஏற்று கொண்ட நீதிபதி கீதா, கீழ் நீதிமன்ற தீர்ப்பை நிறுத்தி வைத்து, பான்டேயை கைது செய்ய உத்தரவிட்டார்.

1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக