வியாழன், ஏப்ரல் 02, 2015

பாபர் மசூதி இடிப்பில் தொடர்பு உடையவர்களை கெளரவப்படுத்தும் மத்திய அரசு - அசாம்கான் சாடல்

பாபர் மசூதி இடிப்பில் தொடர்பு உடையவர்களை கெளரவப்படுத்தும் மனப்பான்மையை மத்திய அரசு கொண்டு உள்ளது என்று உத்தபிரதேசம் மாநில மந்திரி அசாம்கான் சாடிஉள்ளார்.

முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவுக்கு நினைவிடம் கட்டுவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. டெல்லியில் யமுனை நதியின் கரையில், நினைவிடம் கட்ட முந்தைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு மறுத்துவிட்ட நிலையில், அவர் மறைந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு, அதே இடத்தில் நினைவிடம் கட்டுவதற்கு மத்தியில் உள்ள பாரதீய ஜனதா அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் பாபர் மசூதி இடிப்பில் தொடர்பு உடையவர்களை கெளரவப்படுத்தும் மனப்பான்மையை மத்திய அரசு கொண்டு உள்ளது என்று உத்தபிரதேசம் மாநில மந்திரி அசாம்கான் சாடிஉள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய உத்தரபிரதேசம் மந்திரி அசாம்கான், முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவுக்கு நினைவிடம் அமைப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது, இது பாபர் மசூதி இடிப்பு சதிதிட்டத்தில் தொடர்பு உடையவர்களை கெளரவப்படுத்தும் மனப்பானமையை மோடி தலைமையிலான அரசு கொண்டு உள்ளது என்பதை சுட்டிக் காட்டுகிறது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு வேர். பாரதீய ஜனதா கிளை, தற்போதைய அரசு ஆர்.எஸ்.எஸ். மற்றும் விஷ்வ இந்து பரிஷத் அமைப்புகளால் இயக்கப்பட்டு வருகிறது. பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, அப்போதைய அரசில் மிகவும் முக்கியமாக இடம் பிடித்தவர்களை கெளவுரப்படுத்த அவர்களால் தீர்மானிக்கப்படுகிறது.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான அத்வானிக்கு, பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டு உள்ளது என்று கூறினார். மேலும், பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் வழங்கியதற்கு பாராட்டு தெரிவித்த அசாம்கான், மத்திய அரசுக்கு சாதகமாக செயல்படுவதாக சி.பி.ஐ.யை விமர்சனம் செய்து உள்ளார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக