ஞாயிறு, ஏப்ரல் 26, 2015

பீகாரில், உ.பி.யில் அதிக பாதிப்பு: இந்தியாவில் 45 பேர் பலி; 100க்கும் மேற்பட்டோர் படுகாயம்

 நேபாளத்தை தொடர்ந்து இந்தியாவிலும் பல மாநிலங்களில் நேற்று நில அதிர்வுகள் ஏற்பட்டன. இதில், பீகார், உத்தரபிரதேசத்தில் அதிக  பாதிப்பு ஏற்பட்டது. மொத்தம் 45 பேர் நில அதிர்வு பாதிப்பால் பலியாகி உள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். நேபாளத்தை  தொடர்ந்து இந்தியாவில் டெல்லி மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டது. இதில் நேபாள எல்லையை ஒட்டியுள்ள பீகாரில்  ரிக்டர் அளவு கோலில் 7.9 ஆக நிலநடுக்கம் பதிவானது. அங்கு பல வீடுகள் இடிந்து விழுந்தன. இதில் சிக்கி 30 பேர் பலியாகினர். 48க்கும்  மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

கிழக்கு சாம்பரன் மாவட்டத்தில் 6 பேரும், சிதாமர்ஹி மாவட்டத்தில் 4 பேரும், தர்பன்காவில் 2 பேரும், சுபால், ஆராரியா, மேற்கு சாம்பரன், சியோஹர்  ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் உள்ளிட்டோர் பலியாகினர். முன்னதாக இம்மாநிலத்தில் ஏற்பட்ட புயலில் சிக்கி 55 பேர் பலியானது  குறிப்பிடத்தக்கது. தகலவறிந்த மாநில நிதிஷ் குமார் உடனடியாக மீட்பு பணிகளை முடுக்கிவிட்டார். டெல்லி நடக்க உள்ள நிதி ஆயோக்  கூட்டத்தையும் அவர் புறக்கணித்துள்ளனர். பிரதமர் மோடி, நிதிஷ்குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சேத விபரங்களை கேட்டறிந்தனர்.  மேலும் மீட்பு பணிகளை துரிதகமாக செயல்படுத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

உத்தரபிரதேசத்தில் பாராபன்கி, கோரக்பூர், சன்ந்த் கபீர் நகரில் மொத்தம் 12 பேர் பலியாகினர். 12க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.  பலியானோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதியாக மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார்.  படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50,000, காயமடைந்தவர்களுக்கு ரூ.20,000 நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகளை முடுக்கிவிட்டுள்ள  அகிலேஷ் யாதவ், பள்ளிகளை உடனடியாக மூடவும், எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதே போல மேற்கு வங்கத்தில் 3 பேர் நில அதிர்வு பாதிப்பால் பலியாகினர். நில அதிர்வால் கூரை இடிந்து விழுந்த விபத்திலும், நெரிசலிலும் சிக்கி  மால்டா மாவட்டத்தில் 69 பேர் படுகாயமடைந்தனர். பஞ்சாப், ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டது. அதிக பாதிப்பு  ஏற்பட்டுள்ள பீகார் மாநிலத்தில் மீட்பு பணிகள் மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக