திங்கள், ஏப்ரல் 20, 2015

புதிய தலைமை தேர்தல் கமிஷனராக ஜைதி பொறுப்பு ஏற்றார்

இந்திய தலைமை தேர்தல் கமிஷனராக இருந்த ஹரிசங்கர் பிரம்மா நேற்று முன்தினம் பணியில் இருந்து ஓய்வுபெற்றார். இதனைத் தொடர்ந்து தேர்தல் கமிஷனராக இருந்த நசீம் ஜைதி புதிய தலைமை தேர்தல் கமிஷனராக நேற்று பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.

இவர் 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் வரை, அதாவது அவர் 65 வயதை அடையும் வரை இந்த பொறுப்பில் இருப்பார். 1976-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியான அவர், விமான போக்குவரத்து அமைச்சகத்தில் நீண்டகாலம் பணியாற்றியவர்.  

பொறுப்பு ஏற்ற பின்னர் தலைமை தேர்தல் கமிஷனர் ஜைதி கூறியதாவது:-

தேர்தல் கமிஷனின் நோக்கமான, எந்த சூழ்நிலையிலும் தேர்தல்கள் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடைபெறவும், தவறுகள் இல்லாத வாக்காளர் பட்டியல் தயாரிக்கவும் பாடுபடுவேன். சமுதாயத்தின் அனைத்து பிரிவினரும், வாக்காளர்களும் வாக்களிக்க வசதியாக பதிவு மற்றும் திருத்த பணிகளை எளிமைப்படுத்துவதில் கவனம் செலுத்துவேன்.  இதற்கு முன்னர் பணியாற்றியவர்களின் வழியிலேயே தேர்தல் ஆணையத்தை மிகவும் துடிப்பானதாகவும், வெளிப்படையான அமைப்பாகவும் மாற்ற முயற்சி செய்வேன்.  

இவ்வாறு  ஜைதி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக