ஞாயிறு, ஏப்ரல் 26, 2015

நேபாள நிலநடுக்கம்: தேடல் மற்றும் மீட்பு நிபுணர்களை அனுப்புகிறது இங்கிலாந்து

நிலநடுக்கத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்திற்கு உதவி செய்யும் பொறுட்டு தேடல் மற்றும் மீட்பு நிபுணர்கள் அடங்கிய 8 அணிகளை இன்று இரவே அனுப்புவதாக இங்கிலாந்து தெரிவித்துள்ளது. 

இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள அந்நாட்டு பிரதமர் டேவிட் கேமரூன் நேபால் நிலநடுக்கம் பற்றிய செய்திகள் அதிர்ச்சியடையவைக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு இங்கிலாந்து தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்யும் என தெரிவித்துள்ளார். 

நேபாளத்தை நேற்று தாக்கிய 7.9 ரிக்டர் அளவிலான மோசமான நில நடுக்கப் பேரழிவில் பலியானோர் எண்ணிக்கை 1500 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து 16 முறை நேபாளத்தை உலுக்கிய நிலநடுக்கத்தில் பல்லாயிரம் வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. வரலாற்று சிறப்புமிக்க பல நினைவு சின்னங்களை மண்மேடாக்கிய இந்த இயற்கையின் கோரத்தாண்டவத்தில் பழமையான பல கோயில்களும் சேதமடைந்தன. 

இந்நிலையில் ஆயிரத்து ஐநூறுக்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளதாக ராணுவ வட்டாரங்களை மேற்கோள் காட்டி பிரபல செய்தி நிறுவனங்கள் தகவல் அளித்துள்ளன. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக