திங்கள், பிப்ரவரி 24, 2014

ஆப்கானிஸ்தானில் இந்திய மருத்துவர்... !


தாலிபான்களின் செல்வாக்கு மிகுந்த காந்தஹார் பகுதியில்
பணியாற்றுவது மகிழ்ச்சியே என்று இந்திய டாக்டர் ஷா நவாஸ்
தெரிவித்துள்ளார்.45 வயதான ஷா நவாஸ் இங்குள்ள ஒரு தனியார்
மருத்துவமனையில் சேவை புரிந்து வருகிறார்.

1996-2001 ஆண்டுகளில் தாலிபான் ஆப்கானை ஆட்சி புரிந்தபோது ஆப்கனின் தலைநகராக காந்தஹார் திகழ்ந்தது.அங்குள்ள தொழிலதிபருடனான தொடர்பு ஷா நவாஸ், காந்தஹார் சென்று
பணியாற்ற காரணமானது.

இதுக்குறித்து பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் ஷா நவாஸ் கூறியது:
வியாபாரம் தொடர்பாக இந்தியாவுக்கு வந்த ஆப்கான் தொழிலபதிபர் காந்தஹாரில் மக்கள் அனுபவிக்கும் துயரங்களைக் குறித்து கூறினார்.ஆரோக்கியத்துறையில் ஆப்கான் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளையும் அவர் விவரித்தார்.

இச்சூழலில் மருத்துவமனையை கட்டுமாறு நான் அவரிடம் கூறினேன்.அதனைத்தொடர்ந்து நான் அங்கு சென்று பணியாற்ற தயார் என்று அவரிடம் தெரிவித்தேன்.எளிமையான வாழ்க்கைப் பாணியை காந்தஹார் மக்கள் கடைப்பிடிக்கின்றார்கள்.

அவர்களின் தேவைகளும் குறைவானது.அடிப்படையான பரிசோதனை கூட இல்லாத சூழலில் நான் காந்தஹாருக்கு 2005-ஆம் ஆண்டு சென்றேன்.இந்திய தூதரகத்தின் உதவி இல்லாமல் காந்தஹாரில் பணியாற்றும் ஒரே டாக்டர் நான் தான் என்றார் ஷா நவாஸ்.

இவருடைய குடும்பத்தினர் மலேசியாவில் உள்ளனர்.அவ்வப்போது இவர்கள் மஹராஷ்ட்ராவில் உள்ள வீட்டில் ஒன்று கூடுவார்கள்.ஏராளமான இந்தியர்கள் காந்தஹாரில் அமெரிக்க மையங்களில் வேலைச் செய்கின்றனர்.
இவர்கள் துபாய் வழியாக ஆப்கானுக்கு வந்தவர்கள்.

இவர்களில் பெரும்பாலோர் இந்திய தூதரகத்துடன் தொடர்பில் இல்லை என்று அதிகாரி ஒருவர் கூறுகிறார்.ஆப்கானில் முதல் விவசாய பல்கலைக்கழகம் இந்திய உதவியுடன் கடந்த வாரம் காந்தஹாரில் துவக்கப்பட்டது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக