ஹரியானாவின் மேவாத்தில் சூறாவளியின் காரணமாக விவசாய பயிர்கள் அழிந்ததால் இழப்பு ஏற்பட்ட விவசாயிகளுக்கு அரசு இழப்பீடாக வழங்கிய காசோலையின் மதிப்பை கேட்டால் அனைவரும் ஆச்சரியம் அடைவார்கள்.பலருக்கும் ஒரு ரூபாய் மற்றும் இரண்டு ரூபாய்க்கான காசோலைகள்வழங்கப்பட்டுள்ளன.
சிண்டிகேட் வங்கி அக்கவுண்டின் மூலம் மாற்றப்பட்டும் வகையில் காசோலைகள் வழங்கப்பட்டுள்ளன.இழப்பீடு கிடைக்கும் என்று நம்பி பலரும் ரூ.100க்கும் அதிகமான தொகையை செலுத்தி வங்கியில் அக்கவுண்டை துவக்கினர்.கிராமத்தில் இருந்து 25 கி.மீ பயண தொலைவில் சிண்டிகேட் வங்கி உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஆண்டு ஜனவரி, பெப்ருவரி மாதங்களில் வீசியசூறாவளிக் காற்றில் மேவாத்தில் 90 சதவீத விவசாயிகளின் விவசாயப் பயிர்களும் அழிந்தன.
வருவாய் துறை நடத்திய சர்வேயின் அடிப்படையில் இழப்பீடு தீர்மானிக்கப்பட்டு சிலருக்கு ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் காசோலைகளும், வேறு சிலருக்கு 12 ரூபாய் காசோலைகளும் வழங்கப்பட்டுள்ளதாக விவசாய அதிகாரி தெரிவித்தார்.
அற்பத்தொகைக்கான காசோலை கிடைத்ததும் பல விவசாயிகள் கோபமடைந்தனர்.சிலர் காசோலையை நான்காக கிழித்து அதிகாரிகளின் முகத்தில் வீசி எறிந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக