உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த சாம்சங்கின் கேலக்ஸி S5 யை சாம்சங் நேற்று ஸ்பெயினில் வெளியிட்டது. ஏப்ரல் மாதத்தில் இருந்து இது அனைத்து ஸ்டோர்களிலும் கிடைக்கும் என்றும் நேற்று சாம்சங் அறிவித்துள்ளது. இதில் இதன் திரை 5.25 அங்குல அளவில் Super AMOLED டிஸ்பிளேயுடன் இருக்கும்.
பிக்ஸெல் அளவு 2560 × 1440 ஆக இருக்கலாம். இந்த போனை வடிவமைப்பதில், புதிய பொருள் ஒன்று பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும் இந்த போனில் சாம்சங் நிறுவனத்தின் டச்விஸ் சாப்ட்வேர் தொகுப்பின் புதிய பதிப்பு, நவீன தொழில் நுட்பத்துடன் அமைக்கப்படலாம். ஆப்பரேட்டிங் சிஸ்டமாக ஆண்ட்ராய்ட் 4.4 கிட்கேட் கிடைக்கும்.
இதில் முக்கியமாக விரல் ரேகை ஸ்கேனர் இருக்கும். இதன் கேமரா 16 எம்.பி. திறன் மற்றும் ISO CELL சென்சார் கொண்டு கிடைக்கும். இதன் பிராஸஸர் 2.5GHz ஸ்நாப்ட்ரேகன் 800 கொண்டுள்ளது இதனால் இதன் வேகமும் நாம் எதிர்பார்ப்பதை விட சற்று அதிகமாகவே இருக்கும் எனலாம்.
மேலும் இதன் ரேம் மெமரி 3 ஜிபி க்கு உள்ளது அதனுடன் இதன் பேட்டரி 2800mAh திறனுடன் இருக்கிறது மற்ற மொபைல்களுடன் இதை ஒப்பிடுகையில் இது சற்று குறைவுதான். ஏனென்றால் லினோவாவில் 4000mAh பேட்டரி திறன் கொண்ட மொபைல்களே வந்துவிட்டது
ஆனால் இவர்கள் 2800mAh தான் கொடுத்துள்ளனர். சென்ற 2013 ஏப்ரல் மாதம் வெளியான, சாம்சங் காலக்ஸி S4, இதுவரை வெளியான ஆண்ட்ராய்ட் மொபைல் போன்களில் அதிகம் விற்பனையான போன் என்ற பெயரை எடுத்துள்ளது. அந்த பெயரை இது தகர்க்குமா அல்லது தோல்வி அடையுமா என்பதை ஏப்ரல் வரை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக