ஆஸ்திரேலிய உளவு நிறுவனம் (DSD) மற்றும் அமெரிக்க பாதுகாப்புத்துறை (NSA) இணைந்து இந்தோனேசியா பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகளின் தொலைபேசி எண்களை திரட்டியது அம்பலமாகியுள்ளது.
மேற்கண்ட தகவலை, ஏற்கனவே அமெரிக்க ரகசியங்களை கசியவிட்ட முன்னால் CIA அதிகாரி எட்வர்ட் ஸ்நோடென் தெரிவித்ததாக தி கார்டியன் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் பல உலக நாடுகளின் தலைவர்களின் தொலைபேசி உரையாடலை ஒட்டுக்கேட்ட அமெரிக்காவுக்கு, ஆஸ்திரேலியா உதவியதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆசிய நாடுகளில் உளவுப் பணிகளை மேற்கொள்வதற்கான களமாக அந்தந்த நாடுகளின் ஆஸ்திரேலிய தூதரகங்கள் பயன்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளதாக, அமெரிக்க உளவுப் பிரிவின் முன்னாள் அதிகாரி எட்வர்ட் ஸ்னோவ்டன் வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதேபோல, இந்தியா, சீனா மற்றும் மலேஷியா உள்ளிட்ட பல நாடுகளில் இவ்வாறு உளவு பார்க்கப்பட்டுள்ளதாக எட்வர்ட் ஸ்னோவ்டன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஆஸ்திரேலிய தூதுவரை இந்தோனேஷிய அதிகாரிகள் அழைத்து விளக்கம் கோரியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக