சிரியாவில் கடந்த 3 வருடங்களாக நடந்து வரும் உள்நாட்டு போரில், முக்கியமான இடங்களை போராளிகள் கைப்பற்றி வருகின்றனர். அதிபர் ஆசாத்துக்கு எதிராக போரிட்டு வரும் போராளிகள், சனிக்கிழமை அதிகாலை டெய்ர் எஸ்ஸார் மாகாணத்தின் மிகப்பெரிய எண்ணெய் வயலான அல் ஒமர் எண்ணெய் வயலை கைப்பற்றியுள்ளனர்.
இதற்கான வீடியோ ஆதாரங்களையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர். ஆனால், இந்த செய்தி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. அது உண்மையானால், அதிபர் ஆசாத்துக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஏனெனில், அனைத்து வாகனங்களுக்கு தேவையான பெட்ரோலியப் பொருட்களும், இங்கிருந்துதான் மற்ற எண்ணெய் கிடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதனால், அவர்களது போர் நடவடிக்கைகளுக்கு தேவையான எரிபொருட்களை வெளிநாடுகளில் தான் இறக்குமதி செய்யவேண்டிய நிலைமை உருவாகும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் சிரியாவின் பெரும்பாலான எண்ணெய் கிடங்குகள், நூஸ்ரா முன்னணி போராளிகள் மற்றுமுள்ள முஸ்லிம் போராளிகள் வசம் வீழ்ந்துவிட்டன என்று பிரிட்டனை சேர்ந்த மனித உரிமை அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
ஆனால், இதுபற்றி அரசு தரப்பில் எந்த செய்தியும் இதுவரை வெளியிடப்படவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக