பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயலாளர் முஹம்மது ரசீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆட்சியிலிருக்கும் அ.தி.மு.க. அரசின் இணையதளம் கடந்த நவம்பர் 1ம் தேதி விஷமி ஒருவரால் இஸ்லாத்தின் பெயரால் முடக்கப்பட்டது. இணையதளத்தை முடக்கியவரை போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர். நேர்மையான விசாரணை மேற்கொண்டு உண்மையான குற்றவாளியை கைது செய்துள்ள காவல்துறை பாராட்டுக்குரியது.
தகவல் தொழில்நுட்பம் பயின்று பெங்களூரில் முன்னணி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் ஈஸ்வரன் என்ற அந்த விஷமியிடம் ஏன்? இப்படி செய்தாய் என்று கேட்டபோது, பொழுதுபோக்கிற்காக இப்படி செய்தேன் என்று பதில் கூறியுள்ளார்.
பொழுது போக்கிற்காக அவர் தேர்ந்தெடுத்தது முஸ்லிம் சமூகமாகும். இந்த செயல் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அர்ப்பணமான அரசியல் ஆதாயங்களுக்காக முஸ்லிம் சமூகத்தை தேசவிரோத, தீவிரவாத சமூகமாக சித்தரித்து போலிப் பிரச்சாரம் செய்து, முஸ்லிம்கள் வெறுக்கப்பட வேண்டியவர்கள் என்ற “பொதுப்புத்தியை” உருவாக்கி வைத்துள்ளனர் பாசிஸ்டுகள்.
ஆனாலும், பாசிஸ்டுகளின் வேடம் அவ்வப்போது வெளிச்சத்திற்கு வந்து உண்மையான தேசவிரோதிகள், தீவிரவாதிகள் யார் என்பது வெளியாகி கொண்டுதான் இருக்கின்றது. உதாரணமாக, கர்நாடகத்தில் முஸ்லிம்களின் பெயரில் பாசிஸ்டுகள் பாகிஸ்தான் கொடியை ஏற்றியதையும், பாகிஸ்தானுக்கு ஆதரவாக இணையதளத்தில் அவர்கள் செய்த மோசடிகளையும் நாடறியும்.
அதேப்போன்றுதான், இப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் அ.தி.மு.க. அரசின் இணையதளத்தை முடக்கியதுடன் “இஸ்லாம் ஜிந்தாபாத், லாங் லிவ் முஸ்லிம்ஸ், பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்ற வாசகங்களுடன் பாகிஸ்தான் கொடியுடன் மனித மண்டை ஓட்டின் உருவமும்” இருந்த பதிவை பார்க்கும் போது இதுவும் பாசிஸ்டுகளின் சதியாக இருக்குமோ என்ற பலத்த சந்தேகம் எழுகின்றது.
தேர்தல்கள் நெருங்கும் வேளையில் பொழுதுபோக்கு என்ற பெயரில் முஸ்லிம் சமூகத்தை கோரமாக சித்தரித்து அ.தி.மு.க.வின் இணையதளம் முடக்கப்பட்டுள்ளது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் பாசிஸ பா.ஜ.க.வினர் தன்மீது தானே குண்டுவீசியும், தன்னைத்தானே கடத்தியும் கலவரங்களை ஏற்படுத்த நடத்திய நாடகங்கள் தோல்வியில் முடிந்ததை நாம் மறந்துவிடக்கூடாது.
இதுவிஷயத்தில் காவல்துறை அதீத கவனம் செலுத்தி கைது செய்யப்பட்ட ஈஸ்வரனின் முழுப் பின்னணியையும் தீவிரமாக விசாரணை செய்து தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேட்டுக் கொள்கின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக