சத்தீஷ்கர் மாநிலத்தில் சுகாதாரத்துறை மந்திரியாக இருந்தவர் கிருஷ்ணமூர்த்தி பாந்தி. இவரிடம் ஆர்.ஆர். பரத்வாஜ் என்பவர் உதவியாளராக இருந்தார். பின்னர் அவர் நீதிபதியாகி ஓய்வு பெற்றார்.
கிருஷ்ணமூர்த்தி பாந்தி தற்போது எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். நாளை நடைபெறும் தேர்தலில் மஸ்தூரி தொகுதியில் பாரதீய ஜனதா வேட்பாளராக மீண்டும் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் பிலாஸ்பூர் மாவட்டம் கோட்வாலி போலீஸ் நிலையத்தில் ஒரு இளம் பெண் எம்.எல்.ஏ. கிருஷ்ணமூர்த்தி மீதும், நீதிபதி மீதும் கற்பழிப்பு புகார் கொடுத்தார்.
அதன்பிறகு அவர் பரத்வாஜ் வீட்டில் உடல் கருகிய நிலையில் கிடந்தார். உடனே அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு கவலைக்கிடமான நிலையில் அந்தப் பெண் நிருபர்களிடம் தனக்கு ஏற்பட்ட கொடுமைகளை விவரித்தார்.
அதில் அவர் பிலாஸ்பூர் மாவட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.ஆர்.பரத்வாஜ் என்னை முதன் முதலில் கற்பழித்தார். அதன்பிறகு அவர் என்னை எம்.எல்.ஏ. கிருஷ்ணமூர்த்தி பாந்தியிடம் அறிமுகப்படுத்த அவருடன் என்னை அனுப்பிவைத்தார்.
எம்.எல்.ஏ. உன்னையும், உன் பிள்ளைகளையும் கவனித்துக் கொள்வார் என்றார். ஆனால் எம்.எல்.ஏ. என்னை கற்பழித்ததுடன் பலருக்கு என்னை விருந்தளித்தார்” என்று கூறியுள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக இவர் தன்னை கற்பழித்தாகவும் புகாரில் தெரிவித்தார்.
எம்.எல்.ஏ.மீது புகார் கொடுத்ததால் தன்னை பரத்வாஜ் அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று விட்டதாக கூறினார். இதற்கிடையே தீயில் கருகிய பெண் இன்று அதிகாலை இறந்தார். இதையடுத்து நீதிபதி பரத்வாஜ் அவரது மகனுடன் கைது செய்யப்பட்டார்.
எம்.எல்.ஏ. மீது புகார் கூறியதால் அந்தப் பெண் தீ வைத்து எரிக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக எம்.எல்.ஏ. மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக