இது குறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி விடுத்துள்ள அறிக்கையில்: தனியார் சொகுசு பேருந்துகளின் சேவை வேகமாக அதிகரித்து வருகின்றன. அரசு விரைவு பேருந்துகளில் சுத்தம், பராமரிப்பு இல்லாததாலும் போதிய அளவு எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்படாததாலும், தனியார் பேருந்துகளை போன்ற வசதிகளும்,சொகுசும் அவற்றில் இல்லாததாலும், அரசு பேருந்துகளின் கட்டணம் குறைவாக இருந்தாலும் மக்கள் தனியார் பேருந்துகளை நாடும் சூழல் உருவாகியுள்ளது.
இதை பயன்படுத்தி கொண்டு தனியார் முதலாளிகள் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல் தாறுமாறான வேகத்தில் பேருந்தை இயக்குவதும், குறிப்பிட்ட கட்டணங்களை விட பல மடங்கு கட்டணங்கள் உருவாக்கப்படுவதும் தொடர் கதையாகி வருகின்றது.
தீபாவளியை முன்னிட்டு சென்னை முதல் நாகர்கோவிலுக்கு 1500 ருபாய் முதல் 2000 ருபாய் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பண்டிகை காலங்களில் அரசு எச்சரிக்கை விடுத்தாலும் அது வெறும் பெயரளவில் மாத்திரமே உள்ளது. இந்த ஆண்டு முதல்வர் அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தும் யாரும் அதை காதில் வாங்கி கொள்ளவில்லை.
நேற்று முன்தினம் ஹைதராபாத்தில் நடைபெற்ற தனியார் பேருந்து விபத்தில் 45 பேர் உருத் தெரியாமல் கருகி பலியாகியுள்ளனர்.
நேற்றைய தினம் தமிழகத்தில் இரண்டு இடங்களில் தனியார் ஆம்னி பேருந்துகளில் அதிவேகத்தால் இரண்டு பேர் உயிர் இழக்க நேரிட்டது.
தமிழக அரசு மக்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி தனியார் பேருந்துகளின் கட்டணம் மற்றும் வேகத்தை கட்டுப்படுத்தவும், முறைப்படுத்தவும் உரிய கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்துகிறேன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக