அமெரிக்காவில் சர்ச்சைக்குரிய "இன்னோசன்ஸ் ஆப் முஸ்லிம்ஸ்' படம் எடுத்த மார்க் பúஸலி யூசுப்புக்கு ஓர் ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.நன்னடத்தை காரணமாக சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட காலத்தில், 4 விதிமுறைகளை மீறியதற்காக அவருக்கு ஓர் ஆண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
வங்கியில் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட யூசுப், 2010ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார்.பின்னர், நன்னடத்தை காரணமாக, பல்வேறு விதிமுறைகளுடன் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.இதனிடையே, சர்ச்சைக்குரிய அவரது திரைப்படத்தினால் உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவரைக் கொல்பவர்களுக்கு ரூ.55 கோடி பரிசளிக்கப்படும் என்று பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் அறிவித்திருந்தார்.இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் வங்கியில் நிதி முறைகேடு தொடர்பாக அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.இதைத் தொடர்ந்து, நீதிமன்ற விதிமுறைகளை மீறியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. விசாரணையில், குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதால் ஓர் ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக