வெள்ளி, நவம்பர் 09, 2012

விஸ்வரூபம்: மதத்தைப் பற்றியதல்ல; மனிதர்களைப் பற்றிய படம்: கமல்ஹாசன் !

"விஸ்வரூபம்' படம், மதத்தைப் பற்றியதல்ல; மனிதர்களைப் பற்றியது என்றார் நடிகர் கமல்ஹாசன்.கமல்ஹாசன் தயாரித்து, இயக்கி, நடித்துள்ள படம் "விஸ்வரூபம்'.  டிரெய்லரை வெளியிட்டு கமல்ஹாசன் பேசியதாவது: ரசிகர்களின் ஏமாற்றத்தைப் போக்கும் வகையில் இன்று நாடு முழுவதும் இந்த டிரெய்லரை வெளியிடுகிறோம் என்றார் கமல்ஹாசன்.நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கமல்ஹாசனிடம் ஆப்கன் தீவிரவாதிகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் சிறுபான்மையினரைப் புண்படுத்துவதுபோல் அமையாதா எனக் கேட்டபோது..
.நம் ஊரில்தான் மற்ற மதத்தினர் சிறுபான்மையினர். ஆனால் உலகம் முழுமைக்கும் என்று பார்த்தால் அவர்கள் பெரும்பான்மையினர்தான்.இது மதத்தைப் பற்றிய படம் அல்ல; மனிதர்களைப் பற்றிய படம். என்னைப் பொருத்தவரை ஒட்டுமொத்தமாக எண்ணிக்கையில் குறைவாக இருக்கும் கலைஞர்கள்தான் சிறுபான்மையினர் என்று பதிலளித்தார்.தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் வெளியாவதால் பிரிண்டுகள் போடும் பணி நிறைவடைந்தவுடன் படத்தின் வெளியீட்டு தேதியை அறிவிப்பதாக கமல்ஹாசன் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக