புதுடெல்லி:பா.ஜ.க தலைவர் நிதின் கட்கரிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் வருமானவரித்துறையின் அறிக்கை வெளியாகியுள்ளது. கட்கரிக்கு சொந்தமான பூர்த்தி பவர் அண்ட் சுகர் லிமிடடில்(பி.பி.எஸ்.எல்) முதலீடுச் செய்துள்ள நிறுவனங்களில் பெரும்பாலானவை போலியானது என்று வருமானவரித்துறை நடத்திய ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.நிறுவனத்தின் கணக்கு விபரங்கள் எங்கும் பதிவுச் செய்யப்பட்டதாக காண முடியவில்லை.
இந்நிறுவனங்கள் அனைத்திற்கும் சிறிய அளவிலான மூலதனமே உள்ளன. இவைகளின் பெயரால் நடந்துள்ள நிதி நடவடிக்கைகள் மிகவும் குறைவாகவே நடந்துள்ளன என்பது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.கட்கரிக்கு சொந்தமான பி.பி.எஸ்.எல் நிறுவனத்தில் முதலீடுச் செய்துள்ள பல நிறுவனங்களின் முகவரிகளும் போலியானவை. முதலீட்டாளர்களில் பலரும் கட்கரியின் ஆதரவாளர்களும், ஓட்டுநர்களுமாவர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.அந்தேரி மற்றும் தாராவியில் உள்ள சேரிப் பகுதிகளில் இந்நிறுவனங்களின் முகவரிகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், இப்பகுதிகளில்அந்த முகவரிகளில் எந்த நிறுவனங்களும் இல்லை.கட்கரியின் நிறுவனத்திற்காக பணம் முதலீடுச் செய்தது ஐடியல் ரோட் பில்டர்ஸ்(ஐ.ஆர்.பி) என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கட்கரி மஹராஷ்ட்ராவில் பொது மராமத்து அமைச்சராக பதவி வகித்த 1995 காலக்கட்டத்தில் ஐ.ஆர்.பிக்கு கோடிக்கணக்கான ரூபாய் ஒப்பந்த வேலைகள் கிடைத்திருந்தன. பி.பி.எஸ்.எல்லில் ஐ.ஆர்.பி 164 கோடி ரூபாய் முதலீடுச் செய்துள்ளது.கார்ப்பரேட் விவகார அமைச்சகமும் கட்கரியின் நிறுவனத்தின் பொருளாதார பின்னணிகளைக் குறித்து விசாரணை நடத்தி வருகிறது. கம்பெனி பதிவாளர் இதுக்குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.அதேவேளையில், பூர்த்தியில் முதலீடுச் செய்துள்ள நிறுவனங்களுக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று கட்கரி கூறுகிறார். கட்கரிக்கு ஆர்.எஸ்.எஸ்ஸும், பா.ஜ.கவும் ஆதரவு அளித்துள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக