வெள்ளி, நவம்பர் 02, 2012

பள்ளிக் குழந்தைகளை கொலை செய்தவனுக்கு தூக்கு.....

கோவை: தமிழகத்தையே உலுக்கிய, கோவையைச் சேர்ந்த முஸ்கான், ரித்திக் என்ற, இரண்டு பள்ளிக் குழந்தைகளை வேனில் கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்த வழக்கில், டிரைவர் மனோகரனுக்கு மரண தண்டனையும், மூன்று ஆயுள் சிறைத் தண்டனையும் விதித்து, கோவை மகளிர் கோர்ட், நேற்று, பரபரப்பு தீர்ப்பை அளித்தது. இதை வரவேற்கும் விதமாக, கோவை நகரின் பல இடங்களில் பொதுமக்கள், இனிப்பு வழங்கினர்.கோவை, ரங்கே கவுடர் வீதி அருகிலுள்ள காத்தான் செட்டி சந்தில் வசிப்பவர் ரஞ்சித் ஜெயின்; ஜவுளி வியாபாரி. இவரது மகள் முஸ்கான், 10, மகன் ரித்திக், 7, கோவை நகரிலுள்ள, சுகுணா ரிப்ஸ் பள்ளியில் படித்து வந்தனர். இந்த குழந்தைகளைக் கடத்தி, பெற்றோரிடம் பணம் பறிக்க நினைத்தான், கால் டாக்சி டிரைவர் மோகனகிருஷ்ணன், 37.கடந்த 2010, அக்., 29, அன்று காலையில், பள்ளிக்குச் செல்ல வீட்டருகே சாலையில் காத்திருந்த இரு குழந்தைகளையும், கால் டாக்சியில் வழக்கம் போல ஏற்றிக் கொண்ட மோகனகிருஷ்ணன், அந்த குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லாமல், கடத்தினான்.பின்,பொள்ளாச்சிஅங்கலக்குறிச்சியைச் சேர்ந்த தன் நண்பனும், டிராக்டர் டிரைவருமான மனோகரனை, சதித் திட்டத்திற்கு கூட்டு சேர்த்தான். வழியில் அவனும் வந்து, வேனில் ஏறிக் கொண்டான்.வேனில், இருவரும், சிறுமி முஸ்கானை பாலியல் பலாத்காரம் செய்தனர். மயக்க நிலையில் துடித்த சிறுமியையும், அவளது தம்பி ரித்திக்கையும், உடுமலை அருகே தீபாலபட்டி பி.ஏ.பி., வாய்க்காலில் தள்ளி, கொலை செய்தனர்.இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மோகனகிருஷ்ணன், மனோகரன் ஆகியோரை, 2010, நவ., 9ம் தேதி, வழக்கு விசாரணைக்காக, கஸ்டடியில் எடுத்த போலீசார், சம்பவங்களை விவரிப்பதற்காக, வேனில், சம்பவ இடத்துக்கு அழைத்துச் சென்றனர்.வழியில், போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்க திட்டமிட்ட மோகனகிருஷ்ணனை, போலீசார், செட்டிபாளையம் சாலையில், என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர். 
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இவ்வழக்கின் விசாரணை, கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. அரசு தரப்பில், 47 சாட்சிகளும், எதிர் தரப்பில், ஆறு சாட்சிகளும் விசாரிக்கப் பட்டனர். இவ்வழக்கில், கடந்த 29ம் தேதி, தீர்ப்பு கூறப்பட்டது.மனோகரன் குற்றவாளி என, தீர்ப்பளித்த நீதிபதி சுப்ரமணியம், நிரூபிக்கப்பட்ட குற்றங்களுக்கு என்ன தண்டனை என்ற விவரத்தை, நேற்று அறிவிப்பதாக தெரிவித்தார். இதன்படி, தண்டனை தீர்ப்பு நேற்று கூறப்பட்டது. பிற்பகல் 2:00 மணியளவில், கோர்ட் இருக்கைக்கு வந்த நீதிபதி சுப்ரமணியம், குற்றவாளியை ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.இதையடுத்து, கோர்ட்டில் மனோகரன் ஆஜர்படுத்தப்பட்டார். கூட்டுச்சதி, பணம் பறிக்கும் நோக்கில் கடத்துதல், கூட்டாகச் சேர்ந்து கற்பழித்தல், கொடூரமாக கொலை செய்தல், சாட்சி ஆவணங்களை மறைத்தல் உள்ளிட்ட, ஆறு பிரிவுகளில் தண்டனைகளை அறிவித்தார்.மனோகரனுக்கு தூக்குத் தண்டனை மற்றும் மூன்று ஆயுள் தண்டனை, உடன் 3,000 ரூபாய் அபராதம் மற்றும் மூன்று ஆண்டு சிறைத் தண்டனை விதித்து, பரபரப்பு தீர்ப்பை கூறினார். கோர்ட் வளாகத்தில் ஏராளமான பொதுமக்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள்திரண்டிருந்தனர்.இனிப்பு வழங்கி வரவேற்பு:@@பள்ளிக் குழந்தைகள் முஸ்கான், ரித்திக் கொலை வழக்கில், குற்றவாளி மனோகரனுக்கு, கோர்ட், மரண தண்டனை விதித்த தகவல் வெளியானதும், கோவை மாநகரின் பல இடங்களில், பொதுமக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.குற்றவாளிகெஞ்சல்:தீர்ப்புகூறப்பட்டதும்,அதிர்ச்சியடைந்தமனோகரன்,நீதிபதிசுப்ரமணியத்திடம் ஒரு கோரிக்கையை வைத்தார்.குற்றமே செய்யாத எனக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது; நான், உங்களிடம் தனியாக பேச வேண் டும்; போலீசாரை வெளியேறச் சொல்லுங்கள் என்றார். ஆனால், இவரது கோரிக்கையை நீதிபதி சுப்ரமணியம் நிராகரித் தார்.குழந்தைகளுக்கு எதிராக குற்றம் புரிவோருக்கு எச்சரிக்கை:@@ மரணதண்டனை தீர்ப்பு குறித்து, அரசு தரப்பு சிறப்பு வக்கீல் சங்கரநாராயணன் கூறியதாவது:கொலை செய்யப்பட்ட குழந்தைகளின் பெற்றோருக்கு நல்ல நீதி கிடைத்துள்ளது. தண்டனை பற்றி நீதிபதி சொல்லும்போது, இனிமேல் பெண்களுக்கோ, குழந்தைகளுக்கோ யாராவது துன்பம், குற்றம் செய்ய நினைத்தால், அவர்களின் கண் முன் இந்த தண்டனை வர வேண்டும்; அவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.குழந்தைகளுக்கு குற்றம் செய்வது பற்றி பகல் கனவு கூட காணக்கூடாது என்றுதான், இந்த தீர்ப்பை வழங்குவதாக நீதிபதி தெரிவித்தார்.மனோகரனின் மீது, ஆறு குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன. ரித்திக், முஸ்கன் ஆகியோரை கொலை செய்த குற்றத்துக்காக தூக்குதண்டனையும், கற்பழிப்பு, கடத்தல், பணம் பறிப்பதற்காக கடத்திய கூட்டு சதி ஆகியவற்றுக்காக மூன்று ஆயுள் தண்டனையும், சாட்சியங்களை அழித்ததற்காக மூன்றாண்டுகள் கடுங்காவல் தண்டனையும் தரப்பட்டுள்ளது.ஆறு குற்றங்களுக்கும் சேர்த்து, உச்சபட்ச தண்டனையாக மரண தண்டனையை நீதிபதி வழங்கியுள்ளார். ஆதரவற்ற, எதிர்க்க சக்தியில்லாத நிலையில், மான், மயில் காட்டுவார்கள் என்று நம்பிச் சென்ற குழந்தைகளுக்கு நம்பிக்கை துரோகம் செய்து, கொடூரமாக கொலை செய்துள்ளனர்; எனவே, குற்றவாளிக்கு தரப்பட்ட தண்டனை, மிகவும் சரியானதாகும்; நீதியானதாகும். சென்னை ஐகோர்ட், டில்லி சுப்ரீம் கோர்ட்களில் நடந்த 60 வழக்குகளின் தன்மை மற்றும் தீர்ப்புகளை ஆராய்ந்தோம்; விசாரணையின்போது, 29 வழக்குகளையும், தண்டனைக்காக 7 வழக்குகளையும் மேற்கொள் காட்டினோம். இந்த தண்டனை, குழந்தைகளுக்கு எதிராக குற்றம் செய்வோருக்கு ஓர் எச்சரிக்கை. இனிமேல், யாருடைய மனதிலும் இத்தகைய எண்ணம் கூட உதிக்காது.இவ்வாறு அரசு தரப்பு சிறப்பு வக்கீல் சங்கரநாராயணன் தெரிவித்தார்.

தீர்ப்பு குறித்து மக்கள் கருத்து...மறக்க முடியாத கொடூர சம்பவம் சி.ஆர்.ரவீந்தரன், எழுத்தாளர்: குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளில் ஈடுபவர்கள் யாராக இருந்தாலும் தயவு தாட்சண்யம் காட்டாமல் கடுமையாக தண்டிக்க வேண்டும். அந்த குழந்தைகளுக்கு நடந்த கொடூரமான சம்பவத்தை, கோவை மக்களால் எந்தக் காலத்திலும் மறக்கவே முடியாது. அதற்கு காரணமான குற்றவாளிக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை சரியானது. எதிர் காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க இத்தகைய தண்டனைகள் அவசியம்தான். மணியன், சமூக சேவகர்: குழந்தைகளை கண்ணு, சாமி என்று பாசத்தோடு, பண்பாடு மாறாமல் அழைப்பவர்கள் கோவை மக்கள்.அப்படிப்பட்ட கோவை மண்ணில் அந்த இரண்டு குழந்தைகளுக்கு நடந்த கொடூரம், மக்கள் மனதில் ஆறாத காயமாக மாறி விட்டது. குற்றவாளிக்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு சரியானது. இது போன்ற கடுமையான தண்டனை வழங்கினால்தான். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறையும். ஷீலா தேவி, வக்கீல்: இது போன்ற கடுமையான குற்றங்களை செய்பவர்கள், எந்த காரணத்தை காட்டியும் தண்டனை யில் இருந்து தப்பி விடக்கூடாது. எல்லோரும் எதிர்பார்த்த படி சரியான தண்டனை வழக்கப்பட்டுள்ளது. இது போன்ற கடுமையான தண்டனைகள் வழங்கினால்தான், எதிர்காலத்தில் சமூக விரோதிகளிடம் இருந்து குழந்தைகளை காப்பாற்ற முடியும். விசாரணைக் குழுவின் தலைமை அதிகாரியாக இருந்தவர் ஆதங்கம்:@@ குழந்தைகள் கொலை வழக்கு தொடர்பான விசாரணைக்கு தலைமை வகித்து, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தவர் போலீஸ் உதவி கமிஷனர் குமாரசாமி; பணியிலிருந்து தற்போது ஓய்வு பெற்று விட்டாலும், தீர்ப்பைத் தெரிந்து கொள்வதற்காக நேற்று அவர் கோர்ட்டுக்கு வந்திருந்தார்; தீர்ப்பு பற்றி அவர் கூறியதாவது: பள்ளி செல்ல காத்திருந்த குழந்தைகளை கடத்திச்சென்று, அறியாத வயதில் சிறுமியை நாசம் செய்து, கொடூரமாக கொலை செய்த சம்பவத்தை கோவை மக்களால் என்றும் மறக்க முடியாது. கள்ளம் கபடமற்ற குழந்தைகளை மிருகத்தனமாக கொலை செய்த கொலையாளிகளில் மோகனகிருஷ்ணன், போலீசிடம் இருந்து தப்பித்த போது சுட்டுக்கொல்லப்பட்டான். மோகனகிருஷ்ணனுக்கு உடந்தையாக செயல்பட்டு, சிறுமியை நாசம் செய்து, சிறுவனை பி.ஏ.பி., வாய்க்கால் தண்ணீரில் தள்ளி கொலை செய்த குற்றத்துக்காக மனோகரனுக்கு உச்சபட்சமாக தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இது மிகச்சரியான தண்டனையாகும். தவறு செய்ய நினைப்போருக்கு இது படிப்பினையாக இருக்கும். இந்த சம்பவத்தில் குழந்தைகளை உயிருடன் மீட்க முடியவில்லை என்ற ஆதங்கம் இன்னும் எனக்கு இருக்கிறது. தற்போது வழங்கியுள்ள தண்டனை, குழந்தைகளின் ஆத்மாவை சாந்திப்படுத்தும். இந்த தண்டனை, சமூகசீரழிவு மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு பாடமாக இருக்கும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார். இனி, பயம் வரவேண்டும்!:தீர்ப்புக்குமுன் நீதிபதி: நீதிபதி சுப்பிரமணியம் தனது தீர்ப்பை வழங்கும் முன் கூறியவை...ஏழ்மை, பெற்றோர் முதியவர்கள் என்ற கருத்தை கவனத்தில் கொண்டு, குறைந்த பட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று, எதிர்தரப்பு வக்கீல் வாதிட்டார்; இதை ஏற்க முடியாது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு இனி பயம் வர வேண்டும். பகலில் கூட இதுபோன்ற கனவுகளை காணக் கூடாது. இதற்காகவே, உச்சபட்ச தண்டனையாக, சாகும்வரை தூக்கிலிட வேண்டும். குழந்தைகளை கடத்த கூட்டுச் சதி செய்தது (120 பி), குழந்தைகளை பிணையாக வைத்து பணம் பறிக்க கடத்துதல் (364ஏ), 12 வயதுக்குட்பட்ட குழந்தையை கற்பழித்தல், கூட்டு சேர்ந்து கற்பழித்தல்(376 (2)) எப் மற்றும் ஜி, கூட்டு சேர்ந்து கொலை செய்தல் (302,302 உடனிணைந்த பிரிவு 34), ஆவணங்களை மறைத்தல் (201, ஐபிசி) ஆகிய பிரிவுகளில் உன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, குற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளது; அதனால் தண்டனை அளிக்கப்படுகிறது. இவ்வாறு கூறியபின்,நீதிபதி தனது தீர்ப்பை வாசித்தார். தீர்ப்பை கேட்டவுடன் மனோகரன், நீதிபதியிடம் உங்களிடம் தனியாக பேச வேண்டும். கோர்ட்டில் இருந்து போலீசாரை வெளியேற உத்தரவிடுங்கள் என, முறையிட்டார்.அதற்கு நீதிபதி,வழக்கு விசாரணை முடிந்து விட்டது. தீர்ப்பும் கூறப்பட்டு விட்டது. இனிமேல்,தனியாக பேச சட்டத்தில் இடமில்லை. தீர்ப்பு நகல் பெற்று, மேல் கோர்ட்டில் உங்கள் வாதத்தை தெரிவித்து, நிவாரணம் தேடிக் கொள்ளலாம்,என்று கூறிவிட்டு, தனது இருக்கையில் இருந்து கீழே இறங்கி அறைக்கு சென்றார். இறுதியாக நீதி வென்றது:@@ குழந்தைகள் கொல்லப்பட்டபோது, கோவை போலீஸ்கமிஷனராக இருந்த சைலேந்திரபாபு, தற்போது கடலோரக் காவல்படை ஏ.டி.ஜி.பி.,யாகவுள்ளார். தீர்ப்பு குறித்து அவர் கூறியதாவது: கோவையில் நடந்த சம்பவத்தை எங்கிருந்தாலும் மறக்க முடியாது. நீதிக்காக கோவை மக்கள் கைகோர்த்து, வெகுண்டெழுந்ததை பார்த்தபோது பிரமிப்பு ஏற்பட்டது. இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும் என்பதற்காக, ஒவ்வொரு சாட்சியிலும் முழு கவனம் செலுத்தப்பட்டது.போலீஸ் குழுவின் ஒட்டுமொத்த முயற்சியால் 45 நாட்களில் குற்றப்பத்திரிகைதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் போலீஸ் அதிகாரிகள், போலீசார் கடுமையாக உழைத்தனர். குழந்தைகளை கடத்தி, நாசம் செய்து, கொடூரமாக கொலை செய்தவர்களுக்கு நியாயமான தண்டனை கிடைத்துள்ளது. இறுதியாக நீதி வென்றுள்ளது. எதிர்பார்த்த தீர்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி.இவ்வாறு, சைலேந்திரபாபு தெரிவித்தார்.கலங்கிய பெற்றோர்! தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மனோகரனின் பெற்றோர் ராமசாமி, செல்வி ஆகியோர் நேற்றுகாலை 10:00 மணிக்கு நீதிமன்றத்துக்கு வந்தனர். இறுக்கமான மனநிலையில், சோர்வோடு காணப்பட்டனர். யாரிடம் பேசினாலும், சில நிமிடத்தில் கண்கலங்கி அழுதனர்.மகனுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை பற்றி அவர்கள் கூறுகையில், மனோகரன் அப்பாவி; விசாரிக்க வேண்டும் என்று போலீசார் அழைத்து வந்தனர். அப்படியே கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். அவன் மீது தவறான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அரசு உத வியுடன் மேல் முறையீடு செய்வோம், என்றனர். வழக்கு நடந்து வந்த பாதை 2010 அக்., 29: முஸ்கான், 10, ஹருத்திக், 7, ஆகிய பள்ளிக் குழந்தைகளை, பணம் பறிக்க ஆசைப்பட்டு மோகன கிருஷ்ணன், மனோகரன் கடத்தி கொலை செய்தனர்.  மோகனகிருஷ்ணன் (வேன் டிரைவர்) கைது செய்யப்பட்டார். அக்., 30: குழந்தைகள் உடல் கால்வாயில் பிணமாக கண்டெடுக்கப்பட்டது. அக்., 31: மோகன கிருஷ்ணனின் கூட்டாளி மனோகரன் கைது. இருவர் மீதும் வழக்குப்பதிவு. நவ., 8: விசாரணைக்காக போலீஸ் வேனில் அழைத்துச் செல்லும் போது, தப்ப முயன்ற மோகனகிருஷ்ணன் சுட்டுக் கொலை. 2010 டிச., 10: மனோகரன் மீது 576 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல். 2011 பிப்., 18: கோவை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை துவக்கம். பின் கோவை மகளிர் நீதிமன்றத்துக்கு மாற்றம். 2011 மார்ச் 4: மனோகரனின் ஜாமின் மனுவை கோவை மகளிர் நீதிமன்றம் ரத்து. 2012 அக்., 22: விசாரணை முடிந்தது. அக்., 26: மனோகரன் குற்றவாளி என கோர்ட் அறிவிப்பு. நவ., 1: மனோகரனுக்கு மரண தண்டனை மற்றும் மூன்று ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக