காஸ்ஸா:தெற்கு காஸ்ஸாவில் ரஃபா எல்லையையொட்டிய சுரங்கங்களை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இஸ்ரேலின் கொடிய தடைகள் மூலம் துயரத்தை அனுபவித்து வரும் காஸ்ஸா மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் இச்சுரங்கங்கள் வாயிலாகவே கிடைத்து வருகின்றன. விமானத்தாக்குதலை தொடரப்போவதாகவும் இஸ்ரேல் மிரட்டல் விடுத்துள்ளது. அதே வேளையில் நேற்று கொலை செய்யப்பட்ட 6 ஃபலஸ்தீனர்களின் விபரங்களை ஃபலஸ்தீன் சுகாதாரத்துறை வட்டாரங்கள் வெளியிட்டுள்ளன.
15-க்கும் 20 வயதுக்கும் இடையில் உள்ளவர்கள் தாம் இஸ்ரேலின் கொடிய தாக்குதலில் பலியானவர்கள் ஆவர். காயமடைந்த 35 பேர்களில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. காஸ்ஸாவின் மீதான தாக்குதலை நியாயப்படுத்தவும், தங்களின் நடவடிக்கைக் குறித்து விளக்கம் அளிக்கவும் இஸ்ரேல் 50 நாடுகளின் தூதர்களின் கூட்டத்தை நடத்தியது. இதனிடையே இஸ்ரேலும், ஹமாஸும் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக