ஹைதராபாத்:வரலாற்றுச் சிறப்பு மிக்க சார்மினாரின் அருகே கோயில் கட்டுவதை நிறுத்திவைக்க கோரி போராட்டம் நடத்திய மஜ்லிஸே இத்திஹாதுல் முஸ்லிமீனின்(எம்.ஐ.எம்) 5 எம்.எல்.ஏக்களை போலீசார் கைது செய்தனர்.
அப்பகுதியில் கடந்த சில தினங்களாக மோதல் சூழல் நீடித்து வருகிறது. எம்.ஐ.எம் தலைவர் அக்பருத்தீன் உவைஸியும் கைது செய்யப்பட்டவர்கள் அடங்குவார்.சார்மினாரின் சுற்றுவட்டாரப் பகுதியில் கோயில் கட்டுமானப் பணிகளை நிறுத்திவைக்கக் கோரி எம்.ஐ.எம் கட்சி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. கட்சி அளித்த புகாரை தொடர்ந்து சார்மினார் அருகே பழையை நிலை நீடிக்கவேண்டும் என்றும், கட்டுமானப் பணிகள் கூடாது என்றும் ஆந்திரமாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.நீதிமன்றத் தீர்ப்பு வெளியான பிறகும் அதனை மீறும் செயல்கள் நடைபெறுவதாக எம்.ஐ.எம் குற்றம் சாட்டுகிறது. சார்மினார் பகுதியில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக