செவ்வாய், நவம்பர் 13, 2012

அரஃபாத்துக்கு விஷம் வைத்தார்களா? பரிசோதனைக்காக உடலைத் தோண்டியெடுக்க ஆயத்தம்...

பாலஸ்தீனத்தின் முன்னாள் தலைவரான யாசர் அரஃபாத் விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படும் ஊகங்கள் சரியா தவறா என்று தீர்மானிக்க முன்னெடுக்கப்படும் நடவடிக்கையின் ஆயத்தமாக அவருடைய கல்லறைக்கு பார்வையாளர்கள் வருகை நிறுத்தப்பட்டு இடத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

2004ஆம் ஆண்டு காரணம் இன்னதென்று தெரியவராமல் பிரான்சின் மருத்துவமனை ஒன்றில் உயிரிழந்த யாசர் அரஃபாத் மேற்குக் கரையின் ரமல்லா நகரில் அடக்கம் செய்யப்பட்டிருந்தார்.யாசர் அரஃபாத் பயன்படுத்திய உடைகளிலும் பொருட்களிலும் கதிரியக்க வீரியம் கொண்ட பொலோனியம் என்ற இரசாயனம் அதிகமாக காணப்பட்டது என்று கண்டறியப்பட்டதை அடுத்து அரஃபாத் மரணம் ஒரு கொலையாக இருக்கலாம் என்ற நோக்கில் கடந்த ஆகஸ்டில் பிரான்ஸ் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.அரஃபாத்தின் கல்லறையைத் தோண்டி உடல் எச்சங்களில் தடயவியல் நிபுணர்கள் பரிசோதனைகளை மேற்கொள்ளவிருக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக