செவ்வாய், நவம்பர் 13, 2012

சிரியா மீது இஸ்ரேல் எச்சரிக்கை வேட்டு...

சிரியாவில் இருந்து வந்த மோட்டார் குண்டுகள் கோலான் குன்றுகளில் உள்ள இஸ்ரேலிய காவல்நிலைகளை தாக்கியதாகக் கூறி, சிரியாவுக்குள் தாம் எச்சரிக்கை வேட்டுக்களை சுட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

1973 ஆம் ஆண்டு போருக்குப் பின்னர், தற்போதுதான் இஸ்ரேலிய இராணுவம் சிரியாவுக்குள் சுட்டுள்ளதாக இஸ்ரேலிய வானொலி கூறியுள்ளது.சிரியாவில் சிரிய அரசாங்கப் படைகளுக்கும், கிளர்ச்சிக்காரர்களுக்கும் இஐயில் நடக்கும் மோதலில் இலக்கு தவறி வந்த செல் ஒன்றே இஸ்ரேலுக்குள் வந்ததாக இஸ்ரேலிய இராணுவம் கூறியுள்ளது.போர் இலக்கணப்படி பார்த்தால் சிரியாவுக்கும், இஸ்ரேலுக்கும் இடையிலான பழைய போர் இன்னமும் முடிவுக்கு வந்ததாக கூறமுடியாது. இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப்பகுதியில் பகுதியில் ஐநா படைகள் இப்போதும் ரோந்தில் ஈடுபடுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக