தென்னிந்திய மாநிலமான ஆந்திராவில் பெய்துவரும் பருவமழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் சிக்கி குறைந்தது 22 பேர் உயிரிழந்துள்ளனர்.சூறாவளியினால் ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன.கடந்த வாரம் தாக்கிய சூறாவளியைத் தொடர்ந்து இப்போது அந்தப் பகுதியில் கனமழை பெய்துவருகிறது.
ஆயிரக்கணக்கான மக்கள் தமது குடியிருப்புகளை விட்டு வெளியேற நேர்ந்துள்ளது.அடுத்துவரும் சில நாட்களுக்கும் கடுமையான மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.சூறாவளி மற்றும் வௌ்ளப் பெருக்கினால் பெருமளவிலான விவசாய நிலங்கள் அழிவடைந்துள்ள நிலையில், அடுத்துவரும் போகங்களில் உணவு உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்படும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது.இதேவேளை, தமிழ்நாட்டிலும் 10 பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.சென்னைக்கு அருகே தரைதட்டிய எண்ணெய்க் கப்பலில் இருந்த பணியாளர்களும் கொல்லப்பட்டவர்களில் அடங்குகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக