வாஷிங்டன்:உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தலில் பராக் ஒபாமா மீண்டும் வெற்றிப் பெற்றுள்ளார். இவ்வெற்றியின் மூலம் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ஒபாமாவும், குடியரசுக் கட்சி வேட்பாளர் மிட் ரோம்னியும் மாறி மாறி மாநிலங்களைக் கைப்பற்றி வந்தனர். ஒரு கட்டத்தில் ரோம்னி முன்னிலை பெற்றுவந்த நிலையில் இறுதியில் ஒபாமா வெற்றிப் பெற்றது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.இறுதியில் ஒபாமா 274 வாக்குகளையும், மிட் ரோம்னி 203 வாக்குகளையும் பெற்றனர்.ஒபாமாவின் வெற்றியை அவரின் ஆதரவாளர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். ட்விட்டர் இணையதளம் மூலம் அமெரிக்க மக்களுக்கு ஒபாமா நன்றியை தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக