வியாழன், ஏப்ரல் 17, 2014

7வது ஐபிஎல் கிரிக்கெட்: மும்பையை எளிதில் வீழ்த்தியது கொல்கத்தா

7வது ஐ.பி.எல் 20 ஓவர் போட்டி அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இதன் முதலாவது போட்டியில் இன்று மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. டாஸ் ஜெயித்த கொல்கத்தா பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய காம்பிர் ரன் ஏதுமின்றி மலிங்கா பந்தில் போல்டானார். இதன்பின்னர் ஜோடி சேர்ந்த பாண்டேவும் காலிசும் அதிரடியாக விளையாடினார். இதனால் அணியின் ரன்வேகம் அதிகரித்தது. பாண்டே 64 ரன்னிலும் காலிஸ் 72 ரன்னிலும் உத்தப்பா 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஆட்டநேர முடிவில் கொல்கத்தா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது. மும்பை தரப்பில் மலிங்கா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக மைக்கேல் ஹசியும், ஆதித்யா தாரேவும் களமிறங்கினர். மைக்கேல் ஹசி மூன்று ரன்களில் வெளியேறினார். பின்னர் இறங்கிய அம்பத்தி ராயுடும், தாரேவும் நிதானமாக விளையாடினர். ராயுடு 48 ரன்களிலும், தாரோ 24 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் ரோகித் சர்மா 27 ரன்களில் ஆட்டமிழந்தார். 

பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறியதால் மும்பை அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்களே எடுத்தது. இதன்முலம் கொல்கத்தா அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பந்துவீச்சில் சுனில் நரேன் 4 நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார். காலிஸ் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக