ஞாயிறு, ஏப்ரல் 27, 2014

தங்க கம்மலை விழுங்கிய கோழி வயிற்றை அறுத்து மீட்ட தம்பதி

குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே  கிடங்கன்கரைவிளை பகுதியை சேர்ந்தவர் ரத்தினசபாபதி. இவரது  மனைவி அகிலா. இவர் தனது 4 கிராம் கம்மலை கழற்றி  சுத்தப்படுத்துவதற்காக வீட்டில் இருந்த மேஜை மீது வைத்துவிட்டு  சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது கம்மலை காண வில்லை.  வீட்டில் யாரும் வந்து செல்லவும் இல்லை. இதனால் கம்மல்  மாயமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது கோழி ஒன்று  மேய்ந்துகொண்டிருந்ததை பார்த்தார். கோழி தீவன பொருட்களை  லாவகமாக கொத்தி உடைத்து சாப்பிட்டதை அவர் கண்டார்.

 இதுபோன்று கோழி தனது கம்மலை கொத்தி விழுங்கியிருக்குமோ  என்ற சந்தேகம் அகிலாவிற்கு ஏற்பட்டது. உடனே அவர் இதனை தனது  கணவரிடம் தெரிவிக்க 2 நாட்களாக அந்த கோழியை கட்டிப்போட்டு  அதற்கு நன்றாக தீவனம் போட்டு அதன் கழிவில் இருந்து கம்மல்  வருமா என்ற எதிர்பார்த்தனர். இருப்பினும் அவர்களது சந்தேகமும்  தீரவில்லை. ஒருவேளை கோழியின் குடலுக்குள் கம்மல்  ஒட்டிக்கொண்டு வெளியே வராமல் இருக்கவும் வாய்ப்பு உண்டு என்று  எண்ணிய அவர்கள் கோழியை 3வது நாள் கசாப்பு செய்தனர். அப்போது  அதன் வயிற்றை கவனமாக அறுத்து பார்த்தபோது அதில் கழிவுகளுடன்  கம்மலும் துண்டு துண்டுகளாக இருந்ததை கண்டனர். கம்மல் கிடைத்த  மகிழ்ச்சியில் கோழியையும் கறி சமைத்து சாப்பிட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக