மோடி தனது உரையில் அறியாமையின் காரணமாக கூறிய தகவல் சமூக இணையதளங்களில் ஹிட்டாகியுள்ளது.
மோடி அரசு கோடிகள் மதிப்புடைய நிலத்தை ஒரு ரூபாய்க்கு கார்ப்பரேட் நிறுவனத்திற்கு விற்றதை ராகுல் காந்தி தனது பிரச்சாரத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.’ஒரு ரூபாய்க்கு இன்று ஒரு டாஃபி(tofee) மட்டுமே கிடைக்கும் என்று அவர் கிண்டலாக குறிப்பிட்டார். அதற்கு பதிலடி கொடுப்பதாக கூறி மோடி தனது பிரச்சாரத்தில் பேசியதுதான் பெரும் சர்ச்சையை கிளப்பியது. ராகுல் காந்தி டாஃபி என்று கூறியதை ட்ராஃபி(trophy) என்று தவறாக புரிந்துகொண்டு மோடி பேசியுள்ளார்.
அப்பொழுது அவர் கூறியது: ராகுலுக்கு முதிர்ச்சி இல்லை. நமது நாட்டில் ட்ராஃபிக்கு நல்லதொரு மதிப்பு உண்டு. உலகக் கோப்பை கிரிக்கெட் விளையாட்டில் வென்று நமது வீரர்கள் ட்ராஃபியைக் கொண்டு வரும்போது நான் அபிமானத்தோடு எனது நெஞ்சை விரித்து நிற்பேன். அதுமட்டுமல்ல, குஜராத் அரசுக்கு வளர்ச்சியில் இதுவரை 300க்கும் அதிகமான ட்ராபிக்கள் கிடைத்துள்ளது என்று மோடி கூறியவுடன் மேடையில் இருந்த ஆங்கிலம் தெரிந்தவர்கள் நெளிந்தனர்.
டாஃபி என்றால் மிட்டாய் என்று பொருள். இதனை அறியாமல் பா.ஜ.கவின் பிரதமர் வேட்பாளர் ட்ராஃபி என்று தவறாக புரிந்துகொண்டு அபத்தங்களை அள்ளி வீசியுள்ளார். என்னவாயினும், மோடியின் பிதற்றல் சமூக இணையதளங்களில் ஹிட்டாகிவிட்டது. இதுபோன்றதொரு நபரை எவ்வாறு பிரதமராக்க முடியும் என்று பலரும் கமெண்டில் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக