சனி, ஏப்ரல் 19, 2014

அதிமுக ஆட்சியில் பிள்ளைகள் படிப்பதற்கு மின்சாரம் இல்லை: கனிமொழி

கொடுமுடி பகுதியில் கணபதிபாளையம் நால் ரோடு, நடுப்பாளையம், புதிய பஸ் நிலையம், க.ஒத்தக்கடை, சிவகிரி ஆகிய இடங்களில் கனிமொழி எம்.பி. திறந்த வேனில் நின்ற படி தி.மு.க. வேட்பாளர் பவித்ரவள்ளியை ஆதரித்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:–
எந்த மாநிலத்திலாவது ஒரு அரசாங்கம் தண்ணீரை விற்பனை செய்வதை கேள்விபட்டு இருக்கிறீர்களா... தமிழ்நாட்டில் தான் முன் உதாரணமாக இதை செய்து இருக்கிறார்கள்.
ஒரு நாளைக்கு 20 லிட்டர் தண்ணீர் தருவதாக கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று பாட்டில் தண்ணீரை விற்பனை செய்கிறார்கள். முதியோர் பென்சன் வந்து 6 மாதமாகி விட்டது. இன்னும் வரவில்லை.

விவசாயத்துக்கு தண்ணீர் இல்லை. குடிப்பதற்கு தண்ணீர் இல்லை. பிள்ளைகள் படிப்பதற்கு மின்சாரம் இல்லை. தொழிற்சாலைகளுக்கு மின்சாரம் இல்லை. ஸ்பின்னிங் மில் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயத்துக்கு எப்போது மின்சாரம் வரும்? எப்போது மோட்டார் போட்டு தண்ணீர் விழுவது? என்ற அவலநிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது.

கலைஞர் அரசு இருந்திருந்தால் இந்த அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கும். இதனால் வரும் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு பாடம் புகட்டுங்கள். தி.மு.க.வுக்கு ஓட்டு போடுங்கள்.
பிரசாரத்தின் போது மாவட்ட தி.மு.க. செயலாளர் என்.கே.கே.பி.ராஜா, இளைஞர் அணி அமைப்பாளர் பிரகாஷ், ஒன்றிய செயலாளர்கள் கொடுமுடி சின்னகுட்டி, மொடக்குறிச்சி குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக