சனி, ஏப்ரல் 19, 2014

பூமியை போன்று வாழ தகுதியுள்ள புதிய கிரகம் கண்டுபிடிப்பு

அமெரிக்காவின் நாசா மையம் சக்தி வாய்ந்த டெலஸ் கோப்புடன் கூடிய கெப்லர் விண்கலத்தை அனுப்பியுள்ளது. அது விண்ணில் ஆய்வு செய்து புது கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை போட்டோ எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது.

இந்த நிலையில் சூரிய மண்டலத்துக்கு வெளியே பூமி போன்ற புதிய கிரகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கு பூமியில் இருப்பது போன்று நட்சத்திரங்கள் உள்ளன. மேலும் திரவ நிலையில் தண்ணீர் குளம் போல் தேங்கி கிடக்கிறது. மேலும் அங்கு பூமியை போன்ற தட்பவெப்பம் நிலவுகிறது.
இதனால் இந்த கிரகம் பூமியை போன்று வாழ தகுதி உடையதாக கருதப்படுகிறது. இந்த கிரகமும் பூமி அளவு உள்ளது. எனவே, இக்கிரகம் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக