செவ்வாய், ஏப்ரல் 22, 2014

இந்துத்துவா குண்டுவெடிப்புகள் குறித்த என்.ஐ.ஏவின் விசாரணை முடங்கியது!

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இந்துத்துவா தீவிரவாதிகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் 2006 செப்டம்பர் முதல் 2008 செப்டம்பர் வரை நடத்திய குண்டுவெடிப்புகளில் 138 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.இவ்வழக்குகள் தொடர்பாக என்.ஐ.ஏ நடத்தி வரும் விசாரணை நிறைவுறாமல் உள்ளது.

2011-ஆம் ஆண்டு முஸ்லிம்கள் மீது அநியாயமாக பழி சுமத்தப்பட்ட குண்டுவெடிப்பு வழக்குகள் என்.ஐ.ஏ வசம் ஒப்படைக்கப்பட்டது.சிலரை கைதுச் செய்ததை தவிர இவ்வழக்கில் எவ்வித முன்னேற்றமும் இல்லை.கைதுச் செய்யப்பட்டவர்களோ குண்டுவெடிப்பை நடத்த தேர்வுச் செய்யப்பட்ட அடியாட்களாவர்.நாசவேலைகளுக்கு பொருளாதார உதவி அளித்து மூளையாக செயல்பட்ட ஆர்.எஸ்.எஸ் தீவிரவாத இயக்கத்தின் தேசிய செயற்குழு உறுப்பினர் இந்திரேஷ்குமாரிடம் விசாரணை நடத்தக்கூட என்.ஐ.ஏவால் இயலவில்லை.முக்கிய சூத்திரதாரிகளான இந்துத்துவா தீவிரவாதிகள் ராம்ஜி கல்சங்கரா, சந்தீப் டாங்கே, அமித் சவுகான் ஆகியோர் எங்கிருக்கின்றார்கள் என்பது என்.ஐ.ஏவுக்கு தெரியவில்லை.
2006 செப்டம்பர் 8-ஆம் தேதி 38 பேர் கொல்லப்பட்ட முதல் மாலேகான் குண்டுவெடிப்பு, 2007 பெப்ருவரி 18-ஆம் தேதி 68 பேர் பலியான சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு, 2007 மே 18-ஆம் தேதி 14 பேர் கொல்லப்பட்ட ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு, 2007 அக்டோபர் 11-ஆம் தேதி 3 பேர் கொல்லப்பட்ட அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு, 2008 செப்டம்பர் 29-ஆம் தேதி நடந்த 2-வது மாலேகான் குண்டுவெடிப்பு, குஜராத் மொடாஸா குண்டுவெடிப்பு ஆகியவற்றை என்.ஐ.ஏ விசாரணை நடத்தி வருகிறது.
மேலும் குண்டுவெடிப்புகளுக்கு முக்கிய சூத்திரதாரியாக செயல்பட்ட ஆர்.எஸ்.எஸ் தீவிரவாத இயக்கத்தின் பிரச்சாரக் சுனில்ஜோஷியின் படுகொலைக் குறித்தும் என்.ஐ.ஏ விசாரிக்கிறது.சுனில் ஜோஷியை சங்க்பரிவார்களே கொலைச் செய்ததாக என்.ஐ.ஏ கருதுகிறது.
பரஸ்பரம் தொடர்புடைய இவ்வழக்குகளை எல்லாம் பல்வேறு புலனாய்வு ஏஜன்சிகள் விசாரிப்பதை விட ஒரே ஏஜன்சி விசாரித்தால் இவற்றுக்கு பின்னால் மூளையாக செயல்பட்டவர்களை விரைவாக கைதுச் செய்ய முடியும் என்ற அடிப்படையில் இவ்வழக்குகள் என்.ஐ.ஏ வசம் ஒப்படைக்கப்பட்டன.
ஆனால், என்.ஐ.ஏவால் கைதுச் செய்யப்பட்ட இந்துத்துவா தீவிரவாதிகள் பலரும், தங்களை நாசவேலைகள் செய்ய தூண்டியவர் ஆர்.எஸ்.எஸ் தேசிய செயற்குழு உறுப்பினர் இந்திரேஷ்குமார் என்று வாக்குமூலம் அளித்த பிறகும் இதுவரை என்.ஐ.ஏ அவரை விசாரணை கூட நடத்தவில்லை.சுனில் ஜோஷிக்காக நிதியுதவியை இந்திரேஷ்குமார் ஏற்பாடுச் செய்தார் என்று கைதுச் செய்யப்பட்டவர்கள் என்.ஐ.ஏயிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
ஆனால், இவர்களின் வாக்குமூலங்களால் மட்டும் இந்திரேஷ்குமாரை குற்றவாளியாக சேர்க்க முடியாது என்று என்.ஐ.ஏ கருதுகிறது.கர்னல் புரோகிதையும், சுதாகர் திரிவேதியையும் காவலில் எடுத்து விசாரிப்பதற்கான என்.ஐ.ஏவின் நடவடிக்கையும் பலன் அளிக்கவில்லை.
இவ்வழக்கு தொடர்பான விசாரணையை நீட்டிக்க சில என்.ஐ.ஏ அதிகாரிகள் விரும்பவில்லையாம். வழக்கு தொடர்பான சம்பவங்கள் நடந்து ஏழு ஆண்டுகள் கழிந்த பிறகே இவ்வழக்குகளை என்.ஐ.ஏ எடுத்துக்கொண்டது.எனவே ஆதாரங்கள் கிடைப்பது சிரமமானது என்று என்.ஐ.ஏ அதிகாரியொருவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக