வெள்ளி, ஏப்ரல் 25, 2014

சிதம்பரம் அருகே பா.ம.க வெறி செயல் : 25 வீடுகள் சூறை

சிதம்பரம் அருகே உள்ளது வடக்குமாங்குடி கிராமம். இங்கு தேர்தல் பிரசாரத்தின் போது பா.ம.க. – விடுதலை சிறுத்தை கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டது.

நேற்று தேர்தல் முடிந்ததற்கு பிறகு இதில்  பா.ம.க வினர் மற்றொரு கட்சியினர் உள்ள பகுதிக்கு உருட்டு கட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடன் சென்று தாக்குதல் நடத்தினார்கள்.

இதில் இரு தரப்பிற்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. அப்போது 25–க்கும் மேற்பட்ட வீடுகளை சூறையாடினார்கள். வீட்டில் உள்ள டி.வி. உள்ளிட்ட பொருட்கள் அடித்து உடைக்கப்பட்டன.

இந்த தாக்குதலில் ராணி (வயது 45), பெத்தான் (70), நாகூரான் (60), குருநாதன் (56), பழனி (80), பாப்பா (65) உள்ளிட்ட 6 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

மோதலையடுத்து அந்த பகுதியில் பா.ம.க. – விடுதலை சிறுத்தை கட்சியினரிடையே மீண்டும் மோதல் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை தடுப்பதற்காக சிதம்பரம் டி.எஸ்.பி. ராஜாராம் தலைமையில் 100–க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக