ஆம் ஆத்மி கட்சி தலைவர் யோகேந்திர யாதவ் பாட்டியாலா மக்களவை தொகுதி வேட்பாளர் தரம்வீரா காந்தியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
பஞ்சாபில் தந்தை, மகன் ஆட்சி செய்கின்றனர். மாநிலம் பொதுமக்களுக்கு உரியது. தந்தை, மகன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியல்ல. எனவே, அவர்களின் ஆட்சியை அகற்ற வேண்டும். பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் ஊழல் நிறைந்த கட்சிகள். நாட்டிற்கு எந்த நன்மையும் செய்ய முடியாத அவர்களை நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும். கெஜ்ரிவால் ஆட்சிக்கு வந்தால் நாட்டில் உள்ள ஊழலை ஒழிப்பார்.
தேர்தலில் மதுபானங்கள், போதைப் பொருள்கள் பயன்படுத்துவதற்கு எதிராக நாங்கள் கண்டிப்பாக போராடுவோம். நேர்மையும் உண்மையும் கண்டிப்பாக ஜெயிக்கும். அரசியலில் நேர்மைக்கான நேரம் வந்துவிட்டது. டெல்லி தேர்தலில் இரண்டு முதல் நான்கு இடங்கள் ஆம் ஆத்மிக்கு கிடைக்கும் என தேர்தல் கருத்துக்கணிப்பாளர்கள் கூறினர். ஆனால், தேர்தல் எந்திரங்கள் திறக்கப்பட்டபோது அவர்கள் எங்களுக்கு 28 இடங்களை கொடுத்தனர். அதேபோன்று மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகும் மே 16-ம் தேதி நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கல்ல.
இவ்வாறு கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக