வியாழன், ஏப்ரல் 24, 2014

ஐ.பி.எல்: ராஜஸ்தானை வீழ்த்தியது சென்னை

துபாயில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரின் லீக் போட்டித்தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை அணியும் ராஜஸ்தான் அணியும் மோதின.
டாஸ் வென்ற ராஜஸ்தான் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஸ்மித் அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் மெக்கல்லம் 6 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து 28 பந்தகளில் 50 ரன்கள் குவித்த ஸ்மித்தும் பின்னி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

பின்னர் அடுத்தடுத்த ஓவர்களில் சென்னை அணியின் விக்கெட்டுகள் வீழ்ந்தன. ரெய்னா 4 ரன்னிலும் டோனி 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பின் வரிசையில் ஜடேஜா 36 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆட்ட நேர முடிவில் சென்னை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் தரப்பில் பாட்டியா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் 141 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் பேட்டிங்கை தொடங்கியது. சென்னை அணியின் நேர்த்தியான பந்து வீச்சால் ராஜஸ்தான் வீரர்கள் ரன் குவிக்க தடுமாறினர். இதனால் அடுத்தடுத்து விக்கெட் வீழ்ந்தது.

நாயர் 5, ரகானே 15, சாம்சன் 26 , வாட்சன் 7, பின்னி 8 ஆகிய சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.

அடுத்து வந்த ஸ்மித் 19 ரன்னும், பாட்டியா 23 ரன்னும் எடுத்தனர். ஆனால் அதன்பின் வந்த வீரர்கள் அவுட் ஆக ராஜஸ்தான் அணி 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 133 ரன்களே எடுத்தது. இதனால் சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக