வெள்ளி, ஏப்ரல் 18, 2014

சிறைக்கைதிகள் தினம்: ஃபலஸ்தீனில் கடைப்பிடிப்பு!

இஸ்ரேல் சிறைகளில் ஃபலஸ்தீன் கைதிகளின் பிரச்சனைகளை சர்வதேச நாடுகளின் கவனத்திற்கு கொண்டுவர சிறைக்கைதிகள் தினம் பல்வேறு நிகழ்ச்சிகளின் வாயிலாக கடைப்பிடிக்கப்பட்டது.
இஸ்ரேல் சிறைகளில் வாடும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஃபலஸ்தீன் மக்களின் விடுதலை மற்றும் அவர்களுக்கான மனித உரிமைகளை உறுதிச் செய்வது ஆகியன இத்தினம் கடைபிடிப்பதன் நோக்கமாகும்.சிறைகளில் ஃபலஸ்தீனர்கள் அனுபவிக்கும் மனித உரிமை மீறல்களையும், கொடிய சித்திரவதைகளையும் உலகின் கவனத்திற்கு கொண்டுவர 1974-ஆம் ஆண்டு முதல் சிறைக்கைதிகள் தினம் கடைப்பிடிப்பது துவங்கப்பட்டது.
இஸ்ரேல் சிறையில் இருந்து முதன்முதலாக ஒரு ஃபலஸ்தீன் கைதி 1974-ஆம் ஆண்டு ஏப்ரல் 17-ஆம் தேதி விடுதலையானதை தொடர்ந்து இத்தினம் சிறைக்கைதிகள் தினமாக கடைப்பிடிப்பது துவங்கியது. இவ்வாண்டு இத்தினம் கடைப்பிடிப்பதன் ஒரு பகுதியாக தன்னார்வ தொண்டு ஆர்வலர்கள் ஆன்லைன் வாயிலாக பிரச்சாரத்தை துவக்கினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக