திங்கள், ஏப்ரல் 28, 2014

ஐ.பி.எல்.: மும்பை அணி தொடர்ந்து 4 வது தோல்வி

ஐ.பி.எல். தொடரின் 16-வது லீக் போட்டி ஷார்ஜாவில் இன்று நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை முதலில் பேட்டிங் செய்தது.
டெல்லி அணியின் அபார பந்து வீச்சால் மும்பை அணியின் வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். பொல்லார்ட் மட்டும் நிலைத்து விளையாடி 33 ரன்கள் எடுத்தார். 20 ஓவர் முடிவில் 125 ரன்கள் மட்டுமே மும்மை அணியால் எடுக்க முடிந்தது.

டெல்லி அணியில் உனத்கெட் 2 விக்கெட்டும், நதீம் மற்றும் பார்னெல் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

126 என்ற எளிதான வெற்றி இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. டி காக் மற்றும் விஜய் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர்.
விஜய் 40 ரன்களில் அவுட் ஆனார். பின்னர் வந்த வீரர்கள் நிதானமாக விளையாட, இறுதியில் டெல்லி அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்து 126 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக