இத்தாலி மற்றும் பிரேசிலில் உள்ள ரோமன் கத்தோலிக்க சர்ச்களில் பணிபுரியும் ஒரு சில பாதிரியார் கள் சிறுவர், சிறுமிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக புகார் எழுந்தது. பாலியல் தொல்லைக்கு பல சிறுமிகள் ஆளாக்கப்பட்டதாக பரபரப்பாக செய்திகள் வெளியாயின. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட சிறுமிகளின் உறவினர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் வலியுறுத்தி வந்தனர்.
ஆனால், நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட சிறுமிகள் அதிருப்தி அடைந்தனர். இந்நிலையில், 'பெண் குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய பாதிரியார்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர்மட்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது' என்று போப் ஆண்டவர் பிரான்சிஸ் சென்ற மாதம் அறிவித்தார். இந்நிலையில் ரோமன் கத்தோலிக்க சர்ச்களில் பணிபுரியும் ஒரு சில பாதிரியார்கள் செய்யும் தவறை எந்த காரணத்தை முன்னிட்டும் ஏற்க முடியாது. தகாத முறையில் நடந்து கொண்ட பாதிரியார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியாக கூறுகிறேன்.
அதே நேரம், அவர்களை மன்னித்து விடுங்கள். எல்லா பாதிரியார்களும் அப்படி அல்ல. ஒரு சிலரின் தவறான நடத்தைதான் இது. அவர்களை மன்னித்து விடுங்கள் என்று தனிப்பட்ட முறையில் கேட்டு கொள்கிறேன் என்று போப் பிரான்சிஸ் முதல் முறையாக கூறியுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக