இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்ககாரா சமீபத்தில் முடிவடைந்த டுவெண்டி 20 உலக கோப்பை போட்டிகளுடன் டுவெண்டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில் அவரை அரசியலுக்கு இழுக்க இலங்கையில் தீவிர முயற்சி நடந்து வருகிறது. விரைவில் நடக்க உள்ள இலங்கை ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்சேவை எதிர்த்து போட்டியிட அவரை பொதுவேட்பாளராக நிறுத்தவும் முயற்சி நடந்து வருகிறது.
டுவெண்டி 20 உலக கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற இலங்கை அணிக்கு சமீபத்தில் இலங்கை நாடாளுமன்றத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது சங்ககாராவிடம் இத்தகைய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. நாடாளுமன்றத்தில எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் சங்ககாரா பேசிக் கொண்டிருந்த போது, அவர் விரைவில் நாடாளுமன்றத்துக்கு வரும் காலம் கனிந்துள்ளது'' என ஐக்கிய தேசிய கட்சி எம்பி ஒருவர் கூறியுள்ளார்.
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட சங்ககாரா பொருத்தமானவர்'' என்று அப்போது எதிர்கட்சியின் மற்றொரு எம்பி கூறியுள்ளார். ஆனால், எதிர்க்கட்சிகள் வீசிய வலையில் சிக்காத சங்ககாரா புன்னகையுடன் அங்கிருந்து எஸ்கேப் ஆகி விட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக