ஈரானில் உளவு பார்த்ததாக அமெரிக்காவைச் சேர்ந்த முன்னாள் கப்பல் பணியாளருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை 10 ஆண்டு சிறைத் தண்டனையாக குறைத்து அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அமெரிக்காவில் வசிக்கும் ஈரான் நாட்டுத் தம்பதியின் மகன் அமீர் ஹெக்மதி.இவர், அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் கப்பல் நிறுவனத்தில் ஒப்பந்ததாரராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், தனது உறவினரைப் பார்க்க ஈரானுக்கு சென்ற அவர், அங்கிருந்தபடி அமெரிக்காவின் சி.ஐ.ஏ. உளவு அமைப்புக்கு வேவு பார்த்ததாக 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பான வழக்கில், 2012 ஜனவரி மாதம் அமீர் ஹெக்மதிக்கு மரண தண்டனை விதித்து ஈரானில் உள்ள கீழ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.இதனை எதிர்த்து ஈரான் உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார். அந்த மனு விசாரணைக்கு வந்தபோது அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையைக் குறைத்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
இதற்கிடையே, அணுசக்தி விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் வல்லரசு நாடுகள் மேற்கொண்டுள்ள இடைக்கால ஒப்பந்தம் கருதி நல்லெண்ண அடிப்படையில், அமீர் ஹெக்மதியை விடுதலை செய்ய வேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் ஈரான் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக