எளிய மக்களின் கட்சியாக உரிமை கொண்டாடும் ஆம் ஆத்மி கட்சியில் 86 வேட்பாளர்கள் கோடிகளுக்கு சொந்தக்காரர்கள்.கட்சி டிக்கெட்டில் போட்டியிடும் 200 பேரில் 86 பேர் கோடிகளுக்கு சொந்தக்காரர்கள் என்பது விண்ணப்ப மனுவுடன் அவர்கள் சமர்ப்பித்த பிரமாணப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெங்களூர் மத்திய தொகுதியில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளரும் இன்ஃபோஸிஸ் முன்னாள் தலைவருமான வி.பாலகிருஷ்ணன் அக்கட்சியில் பெரும் பணக்கார வேட்பாளர் ஆவார்.தனக்கு 189 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து உண்டு என்று அவர் பிரமாணப்பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.
மஹராஷ்ட்ராவில் நீர் பாசனத்துறையில் நடந்த ஊழலை வெளிக்கொண்டு வந்த அஞ்சலி தமானியின் சொத்து மதிப்பு 19 கோடியாகும்.நாக்பூர் தொகுதியில் இவர் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளராக போட்டியிடுகிறார். ராஜஸ்தானில் ஜுன் ஜுனு தொகுதியில் போட்டியிடும்
முன்னாள் லெஃப்டினண்ட் ஜெனரல் ராஜேந்திர சிங் கத்ரியாரின் சொத்து மதிப்பு 13 கோடி.சட்டீஷ்கரில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளரும் மாடலுமான குல் பாகின் சொத்து மதிப்பு 12 கோடி.காஸியாபாத் தொகுதி வேட்பாளர் ஷாஸியா இல்மியின் சொத்து மதிப்பு 30 கோடி. எர்ணாகுளம் தொகுதியில் போட்டியிட்ட பத்திரிகையாளர் அனிதா பிரதாபின் சொத்து மதிப்பு 20 கோடி.பத்திரிகையாளர் அஷுதோஷின் சொத்து மதிப்பு எட்டு கோடி ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக