அதிமுகவுக்கு ஆதரவாக சீமான் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குக் கேட்டு தேர்தல் பிரசாரம் செய்வதைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட அமைப்பு கலைக்கப்பட்டுள்ளது.தஞ்சை தெற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் அவசரக் கூட்டம் மாவட்டத் தலைவர் பாப்பாநாடு காமராஜ் தலைமையில் பட்டுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், சீமானின் இத்தகைய நிலைபாட்டில் உடன்பாடு இல்லாததால், தஞ்சை தெற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் அவரவர் வகித்த பொறுப்புகளிலிருந்து விலகி, தஞ்சை தெற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியைக் கலைத்துவிட முடிவு செய்யப்படுகிறது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மாவட்டச் செயலர் பழ. சக்திவேல், துணைச் செயலர் ரமேஷ், இணைச் செயலர் தேவராஜ், துணைத் தலைவர் ஜகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக